சமீப காலமாக லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் தகராறுகள் ஏற்படுவதும், அதில் பெண்கள் கொடூரமாக கொலை செய்யப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் மற்றொரு கொடூரம் பெங்களூருவில் அரங்கேறி யுள்ளது. கேரளாவில் திருவனந்த புரத்தைச் சேர்ந்த 24 வயதான தேவா என்னும் இளம்பெண் பெங்களூருவில் தங்கி பணியாற்றி வந்தார்.
ஸ்பெஷல் நெய் பன் பரோட்டா தயாரிப்பது எப்படி?
இவரும் கொல்லம் பகுதியைச் சேர்ந்த வைஷ்ணவ் என்ற இளைஞரும் லிவின் டுகெதர் முறையில் பெங்களூரு மைக்கோ லேஅவுட்டில் அபார்ட்மெண்ட் ஒன்றில் வாடகைக்கு வசித்து வந்தனர்.
கல்லூரியில் இருந்தே காதலித்து வந்த இவர்கள் பெங்களூருவின் பகுதியில் மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வந்தனர்.
இரண்டு வருடங்களாக ஒன்றாக கணவன் - மனைவி போல வசித்து வந்த இவர்களுக்குள் அவ்வப்போது பிரச்னை எழுந்துள்ளது. தேவாவுக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக வைஷ்ணவ் சந்தேகப்பட்டார்.
இந்த நிலையில் இது தொடர்பாக நேற்று இருவருக்கும் இடையே மீண்டும் பிரச்னை வெடித்தது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த வைஷ்ணவ், சமையலுக்காக வைத்திருந்த குக்கரை எடுத்து தேவாவை கடுமையாக தாக்கியுள்ளார்.
அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில், போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து தேவாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததாக அக்கம் பக்கத்தினர் கூறுகின்றனர். ஆனாலும், இருவரும் ஒருவர் மீது ஒருவர் இதுவரை புகார் அளித்ததில்லை.
இருவருக்கும் இடையே நடைபெறும் தகறாரு அவர்களது குடும்பத்தினருக்கு தெரியும் என்றும், அவர்கள் இருவரையும் அவ்வப்போது சமாதானம் செய்து வைத்ததாகக் கூறப்படுகிறது.
மேலும், விரைவில் திருமணம் செய்ய இருந்ததாகவும் இந்த நிலையில் தான் இது போன்ற கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ள தாகவும் தகவல் வெளியாகி யுள்ளது.
கிரிஸ்பி மசாலா டோஸ்ட் செய்வது எப்படி?
விசாரணையில் தான் கொலைக்கான முழுக் காரணமும் தெரிய வரும் என போலீசார் தெரிவிக்கின்றனர். வாழ வேண்டிய வயதில் காதலனின் சந்தேக புத்தியின் காரணமாக காதலிக்கு நேர்ந்த துயரம் கவலைக் குரியதாக மாறியுள்ளது.
Thanks for Your Comments