நடிகை வனிதா, தன்னுடைய தந்தை விஜயகுமார் தனக்கு தப்பு தப்பா அட்வைஸ் கொடுத்ததாகவும் அதனால் தான் தன்னுடைய வாழ்க்கையே சீரழிந்ததாகவும் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
வனிதா தற்போது தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும் சினிமாவிலும் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார். இதனிடையே அவரது மகள் ஜோவிகாவும் விரைவில் சினிமாவில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே யூடியூப் சேனலுக்காக நடிகை ரேகா நாயர், பேட்டி எடுக்கும்போது வனிதா தனது தந்தை மீதுள்ள கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
அந்தப் பேட்டியில் வனிதா கூறியதாவது,
நான் இப்போது மனதளவில் வலுவான பெண்ணாக இருக்கிறேன். இந்த மாற்றத்திற்கான காரணமும் என்னுடைய அப்பாதான். என் அப்பா ஒரு பேட்டியில பேசுனதை பார்த்தேன்.
அதில் அவர், என் பிள்ளைகள் எல்லாம் என் பேச்சை கேட்பாங்கனு சொல்லி கவிதா, அனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி, அருண் விஜய்னு எல்லாரையும் குறிப்பிட்டார்.
அதில் அப்பா பிள்ளைகளை பற்றி பேசி இருப்பார். ஆனால் என்னை பற்றி அதில் ஒரு வார்த்தை கூட பேசவே இல்லை. இது எனக்கு கோபத்தை கொடுத்தது. அதனால் நான் பல தடவை கோபத்தில் அழுதேன்.
ஆனால் அவர் சொன்ன விஷயத்தை மட்டும் நான் ஏற்றுக் கொள்கிறேன். அதாவது பெண் பிள்ளைகளில் நான் மட்டும் தான் அப்பாவுடைய பேச்சை கேட்கவில்லை. அவருக்கு கீழ்ப்படியாமல் நான் இருந்த தெல்லாம் உண்மை தான்.
தப்பான அட்வைஸ் கொடுத்தா நான் கேட்கணும்னு அவசியம் இல்லை. அவர் வனிதா மட்டும் தான் என் பேச்சை கேட்கலனு சொல்லிருந்தா நானே கைதட்டி இருப்பேன்.
நான் ஒருத்தி இல்லாத மாதிரி அவர் பேசின அந்த பேட்டியை 10 முறை திரும்ப திரும்ப பார்த்தேன். இதில் எனக்கு கடுப்பான விஷயம் என்னவென்றால், நான் மட்டும் தான் அவர் பேச்சை உண்மையா கேட்டேன்.
அதனால் அவர் பெயரை மாற்ற மாட்டேன். நீங்க சொல்லலாம் நான் உங்க குடும்பத்துல இல்லைனு, ஆனா உலகத்தை பொறுத்தவரை நான் உங்க பொண்ணு தான். அவரை ரொம்ப மிஸ் பண்ணிருக்கேன்.
பல நாள் அவருக்காக அழுதிருக்கேன். ஒரு நாள் என் பொண்ணு ஜோவிகா என்னிடம் ஒரு கேள்வி கேட்டாள், இல்லாத ஒருத்தரை பற்றி இன்னும் எவ்ளோ நாள் கவலைப் பட்டுகிட்டே இருக்க போறிங்க,
இருக்குற எங்கள பத்தி யோசிங்கனு சொன்னா, அன்னைக்கு தான் இதை யெல்லாம் தூக்கி போட்டேன். இவ்வாறு வனிதா விஜயகுமார் கூறியுள்ளார்.
Thanks for Your Comments