யூரிக் அமிலம் அதிகரிக்க காரணம் அசைவ உணவா? அதிர்ச்சியூட்டும் ஆய்வு !

0

யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். இது பியூரின் எனப்படும் ரசாயனங்களை உடல் வெளியிடும் போது உற்பத்தி செய்யப்படும் அமிலமாகும்.

யூரிக் அமிலம் அதிகரிக்க காரணம் அசைவ உணவா? அதிர்ச்சியூட்டும் ஆய்வு !
சிலருக்கு அசைவம் மிகவும் பிடிக்கும். வாரம் ஒரு முறை மட்டுமே சாப்பிடுவோர் இதனாலேயே ஞாயிறு எப்போது வரும் என்று காத்திருப்பார்கள். 

மறுபுறம், இறைச்சி சாப்பிடுவது இல்லை என்று சொல்பவர்களும் இருக்கிறார்கள். இந்நிலையில் இறைச்சி உணவுகள் உடல் நலத்திற்கு அதிக கேடு விளைவிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

பூனைகள் பற்றி நீங்கள் அறியாத பல சுவாரஸ்ய உண்மைகள் !

இறைச்சியை அதிகமாக உட்கொள்வதால் பல உடல்நல பிரச்சனைகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. அசைவம் அதிக யூரிக் அமிலம் உருவாவதை ஊக்குவிக்கும் என்று கூறப்படுகிறது. 

யூரிக் அமிலம் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு கழிவுப் பொருளாகும். இது பியூரின் எனப்படும் ரசாயனங்களை உடல் வெளியிடும் போது உற்பத்தி செய்யப்படும் அமிலமாகும். 

யூரிக் அமிலம் அதிகமாக சுரப்பது ஹைப்பர்யூரிசிமியா எனப்படும். இது கீல்வாதம் போன்ற பல வகையான நோய்களுக்கு வழிவகுக்கும். 

இறைச்சியை அதிகம் உண்பவர்களுக்கு ரத்தத்தில் யூரிக் அமிலம் சுரப்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம்.

இதுகுறித்து டெல்லியைச் சேர்ந்த டாக்டர் அம்ரேந்திர பதக் கூறுகையில், யூரிக் அமிலம் என்பது உடலின் கழிவுப் பொருள். இது கல்லீரலில் சுரக்கப்பட்டு சிறுநீரகங்களுக்கு அனுப்பப் படுகிறது. 

பின்னர் சிறுநீர் மூலம் வெளியேற்றப் படுகிறது. யூரிக் அமிலம் 3 காரணங்களால் அதிகரிக்கலாம். 

முதலில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் இரண்டாவது சிறுநீரகம் அல்லது கல்லீரலில் பிரச்சனை என்றால் அதிகரிக்கிறது. மூன்றாவதாக அதிக ப்யூரின் மற்றும் அசைவ உணவுகளை உண்பதால் அதிகரிக்கிறது. 

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால், ஆரம்பத்திலேயே சில அறிகுறிகள் தென்படலாம். யூரிக் அமிலம் அதிகமாக இருக்கும்போது சில அறிகுறிகள் தோன்றும். உடல் அல்லது மூட்டுகளில் அதிக வலி உண்டாகும். 

5 வயதில் தாயான குழந்தை... குழந்தைகள் விரைவில் பருவமடைய காரணம்?

மூட்டுகளில் கூச்ச உணர்வு, சிறுநீர் ஒரு விசித்திரமான வாசனை வரும். அதிகப் படியான குமட்டல் அல்லது வாந்தி உணர்வு இருக்கும்.

யூரிக் அமிலம் அதிகரிக்க காரணம் அசைவ உணவா? அதிர்ச்சியூட்டும் ஆய்வு !

அசைவ உணவுகள் ஏன் யூரிக் அமில அளவை அதிகரிக்கின்றன?டாக்டர். அம்ரேந்திர பதக்கின் கூற்றுப்படி, அதிக புரதம் மற்றும் பியூரின் உணவுகளை உட்கொள்வது யூரிக் அமிலத்தின் அளவை அதிகரிக்கும். 

குறிப்பாக சிவப்பு இறைச்சியில் யூரிக் அமிலத்தின் உற்பத்தியை அதிகரிக்கும் பியூரின்கள் அதிகம் உள்ளன. யூரிக் அமில பிரச்சனையால் பலர் அவதிப் படுகின்றனர். 

இதை சரிவிகித உணவின் மூலம் எளிதில் கட்டுப்படுத்தலாம். யூரிக் ஆசிட் பிரச்னையை கண்டறிந்தால், ஒரு வாரத்தில் எளிதாக குணப்படுத்தலாம் என்கிறார்.

பாதாமுக்கு பதில் இதை ஊற வைத்து சாப்பிட்டால் அதிக பலன் கிடைக்கும் !

யூரிக் அமில உற்பத்தியைக் கட்டுப்படுத்த சில குறிப்புகள்: 

இறைச்சி சாப்பிடுவதைத் தவிர்க்கவும், ஆரோக்கியத்திற்காக வாழ்க்கை முறையை மாற்றவும், அதிக சர்க்கரை பானங்கள் குடிப்பதை நிறுத்தவும், 

உடற்பயிற்சி மற்றும் உடல் செயல்பாடு அவசியம், வழக்கமான உடல்நலப் பரிசோதனை மற்றும் வழக்கமான ஆரோக்கிய பராமரிப்பு அவசியம்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings