கீமோ மூலம் கேன்சரை கொல்லும் மாத்திரை... நம்பிக்கை அளிக்கும் ஆய்வு !

0

ஆண்டாண்டு காலமாக பலரின் உயிரை காவு வாங்கி கொண்டிருப்பது தான் புற்றுநோய். ஆரம்ப காலத்தில் இந்த நோய்யை கண்டறிந்தால் அதனை குணப்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப் படுகின்றது. 

கீமோ மூலம் கேன்சரை கொல்லும் மாத்திரை... நம்பிக்கை அளிக்கும் ஆய்வு !
இருப்பினும் இதன் அறிகுறி அறியாமல் முற்றிய நிலையில் தங்களது உயிரை புற்றுநோய்க்கு பறி கொடுத்த வர்களும் உண்டு.

இந்தநிலையில், அமெரிக்காவில் உள்ள முன்னணி புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் சிகிச்சை நிறுவனமான சிட்டி ஆஃப் ஹோப்பின் விஞ்ஞானிகள், 

AOH1996 என்ற மூலக்கூறின் மூலமாக புற்றுநோய்யை கொல்லும் ஒரு மாத்திரையை  தங்களது முதற்கட்ட ஆராய்ச்சியின் மூலம் கண்டுப் பிடித்துள்ளனர். 

இந்த புற்றுநோய் ஆராய்ச்சியின் முடிவு பல மில்லியன் கணக்கானவர் களுக்கு நம்பிக்கையை அளிக்கும் என்று கூறலாம். 

காலையில் எழும் போது ஏன் வாய் துர்நாற்றம் வீசுகிறது?

இந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புற்று நோய்க்கான மாத்திரையானது குறிப்பாக புற்றுநோய் கட்டிகளை மட்டும் குறி வைத்து அழிக்கின்றது. ஆரோக்கியமான செல்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. 

இதற்கு முன்பாக 1996 ஆம் ஆண்டு பிறந்த அன்னா ஒலிவியா ஹீலி (AOH) என்ற புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிற்கு  AOH1996 மூலக்கூறின் மூலம்  புற்றுநோய் சிகிச்சையானது செய்யப்பட்டது. 

ஆனால் அது தோல்வி அடைந்த நிலையில் இடைவிடாத முயற்சியால் தற்போது ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தும் ஆய்வாக இந்த முதற்கட்ட சோதனையானது நிகழ்ந்துள்ளது என்று கூறலாம்.

எந்த மாத்திரை எப்படி செயல்படுகின்றது?

கீமோ மூலம் கேன்சரை கொல்லும் மாத்திரை... நம்பிக்கை அளிக்கும் ஆய்வு !

AOH1996 என்பது ஒரு பனிப்புயல் (snowstrom)  போல  புற்றுநோயால்  பாதிக்கப்பட்ட  செல்களைத் தேர்ந்தெடுத்து அதனை முற்றிலும் மூடி விடுகிறது. 

அது மட்டுமல்லாது உடலின் மற்ற பகுதியில் உள்ள ஆரோக்கியமான செல்களுக்கு எந்த விதமான பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை.

மார்பகம், மூளை, கருப்பை, கர்ப்பப்பை வாய், தோல் மற்றும் நுரையீரல் இப்படி பல்வேறு பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை தேர்ந்தெடுத்து அவற்றிக்கு முன் மருத்துவ ஆய்வானது (Preclinical studies) நடத்தப்பட்டு முதற்கட்ட சோதனையானது வெற்றியை அளித்துள்ளது. 

இந்த AOH1996 ஆனது உடலில் எந்த ஒரு நச்சுத் தன்மையையும்  ஏற்படுத்தாமல் புற்றுநோய் கட்டியின்  வளர்ச்சியை மட்டுமே அழிக்கிறது. PCNA என்ற புரதத்தை அழிப்பது என்பது மிகவும் கடினமான ஒன்று. 

இந்த சிகிச்சை முறையை யாரும் குறிவைத்ததில்லை, ஏனெனில் புற்றுநோயை ஏற்படுத்தும் புரதத்தை அழிப்பது என்பது நடக்காத ஒன்றாக பார்க்கப்பட்டது. 

பாலியல் கொடுமையால் சாமியாரின் ஆணுறுப்பை வெட்டிய பெண் !

ஆனால் சிட்டி ஆஃப் ஹோப் ஆராய்ச்சி மையம் இதனை சவாலாக எடுத்து இதில் வெற்றியை கண்டுள்ளது என்று சிட்டி ஆஃப் ஹோப்பின் மூலக்கூறு நோயறிதல் மற்றும் பரிசோதனை சிகிச்சைகள் துறையின் இணை ஆராய்ச்சி பேராசிரியர் Long Gu கூறினார்.

இந்த ஆராய்ச்சி லட்சக்காண மக்களின் மனதில் நிச்சயமாக ஒரு நம்பிக்கையை உருவாக்குவதாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings