ஹை ஃப்ளை ஏவியேஷன் நிறுவனம், பனியால் மூடப்பட்ட அண்டார்காவில் விமானத்தை தரையிறக்கி வரலாறு படைத்துள்ளது. எப்போதும் பனியால் மூடப்பட்டிருக்கும் இடம் தான் அண்டார்டிகா (Antarctica).
ஏர்பஸ் ஏ-340 (Airbus A-340) அண்டார்டிகாவில் தரையிறங்கி வரலாறு படைத்துள்ளது. விமான நிலையம் ஏதும் இல்லாத நிலையில், விமானத்தின் தரையிறக்கம் எங்கே, எப்படி நடந்தது?
அண்டார்டிகாவில் விமானம் தரை இறங்கியது ஒரு வரலாற்று நிகழ்வு என்பதை விட சாதனை என்று தான் சொல்ல வேண்டும். அண்டார்டிகாவில் பனியைத் தவிர வேறெதையும் பார்க்க இயலாது.
அதில் 290 பேர் பயணிக்கக் கூடிய ஏர்பஸ் ஏ-340 விமானம் பனி படர்ந்த ஓடுபாதையில் தரை இறங்கியது. சுற்றுலாத் துறையில் பணிபுரியும் விமான நிறுவனமான Hi Fly இதை சாத்தியமாக்கி யுள்ளது.
Hi Fly 801 பயணிகள் விமானம் நவம்பர் 2 ஆம் தேதி தென்னாப்பிரிக்காவின் கேப் டவுனில் இருந்து புறப்பட்டது. ஐந்து மணி நேர பயணத்திற்கு பிறகு இந்த விமானம் அண்டார்டிகாவை அடைந்தது.
கடந்த 3 ஆண்டுகளில் பலமுறை நடத்தப்பட்ட சோதனை : .
ஆண்டு முழுவதும் அண்டார்டிகாவில் பனி உறைந்து கிடக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், இங்கு ஓடுபாதை தயார் செய்வதும் பெரிய பணியாக இருந்தது.
முன்னதாக, 2019 மற்றும் 2020 க்கு இடையில், பல சோதனைகள் நடத்தப்பட்டன. அண்டார்டிகாவில் விமான நிலையம் இல்லை, ஆனால் இங்கு பல விமானஸ்டிரிப்கள் மற்றும் ஓடுபாதைகள் அமைக்கப் பட்டுள்ளன.
உங்களின் ஆதார் எங்கே பயன்படுத்தப்பட்டது என்பதை தெரிந்து கொள்ள !
ஓடுபாதை காற்று இல்லாத பனியின் அடுக்கை கொண்டது. இந்த பணி அடுக்கு 1.4 கிலோமீட்டர் ஆழம் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments