சென்னையில் நடைபெற்ற ஜவான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் பேசியது தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது.
ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, யோகிபாபு உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
மேலும் அனிருத் இந்த படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் இசையமைப் பாளராக அறிமுகமாகிறார். வரும் செப்டம்பர் 7-ந் தேதி ஜவான் படம் வெளியாக உள்ளது.
இந்நிலையில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னை ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்காக ஷாருக்கான் சென்னை வந்த நிலையில், விஜய் சேதுபதி, சன்யா மல்ஹோத்ரா, இயக்குனர் அட்லீ மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதே சமயம் படத்தின் நாயகி நயன்தாரா நிகழ்ச்சியில் பங்கேற்க வில்லை. இதனிடையே கூட்டத்தில் உரையாற்றிய நடிகர் ஷாருக்கான் படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினரைப் பாராட்டி தனது நன்றியைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய ஷாருக், ஜவான் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவருக்கும் பட்டம் கொடுத்தது பற்றி குறிப்பிட்டார்.
இதில் அனிருத்தைப் பற்றி பேசிய அவர், நான் உன்னை என் குழந்தை என்று அழைக்க விரும்புகிறேன என்று கூறினார்.
தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு, பாராட்டு தெரிவித்த ஷாருக், விஜய் சார் எனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று கொஞ்சம் நேரம் எடுத்து சொல்கிறேன். அவரை மெல்போர்னில் சந்தித்தேன்.
அவர் தமிழில் பேசுவதைக் கேட்டேன். அந்த நிகழ்வைப் பற்றித்தான் நினைக்கிறேன். ஒரு நாள் நயன்தாராவின் திருமணத்திற்காக நாங்கள் இங்கு வந்திருந்தோம். அப்போது நான் அவரைச் சந்தித்தேன்.
அப்போது தான் நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து பணியாற்ற செய்தோம், உங்களிடமிருந்து நான் எவ்வளவு கற்றுக் கொண்டேன் என்று என்னால் சொல்ல முடியாது என கூறியுள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் பணியாற்றியது குறித்து பேசிய ஷாருக் தான் சந்தித்த பல்வேறு நபர்களிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டதாகவும், திரை இடத்தைப் பகிர்ந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
ஜவான் செப்டம்பர் 7, 2023 அன்று ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
கமர்ஷியல் என்டர்டெய்னராக இருக்கும் இந்த படத்தில், உளவுத்துறை அதிகாரி மற்றும் திருடன் ஆகிய இரு வேடங்களில் ஷாருக்கான் நடித்துள்ளார்.
புனே, மும்பை, ஹைதராபாத், சென்னை, ராஜஸ்தான் மற்றும் ஔரங்காபாத் ஆகிய இடங்களில் படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments