வேலை கிடைத்த உடனே ராஜினாமா.. அட்வைஸ் செய்த இணையவாசிகள் !

0

தற்காலத்தில் வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக இருக்கிறது. படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் பலர் அவதிப்படுவதால், கிடைக்கும் வேலையை செய்து கொண்டே தங்களுக்கு பிடித்த துறையில் வேலையை பின்னாளில் தேடி கொள்கிறார்கள். 

வேலை கிடைத்த உடனே ராஜினாமா.. அட்வைஸ் செய்த இணையவாசிகள் !
பெரும்பாலானோர் முதலில் கிடைத்த வேலையை ஒட்டிய துறையிலேயே அடுத்தடுத்து நிறுவனங்களில் வேலை மாறி தங்களது வாழ்க்கையை ஒட்டி விடுகின்றனர். 

வேலை வாய்ப்பின்மை என்பது இன்று நேற்றல்ல பல ஆண்டுகளாகவே நாட்டில் நிலவி வரும் நிலையாக இருந்து பல இளைஞர்களின் வாழ்க்கையை புரட்டி போட்டு விடுகிறது.

சுவையான ரைஸ் பிரெட் கட்லெட் செய்வது எப்படி?

நிலைமை இப்படி இருக்க தனக்கு கிடைத்த வேலையை ஒரே நாளிலேயே விட்டு வெளியேறிய நபரை பற்றி கேள்விப்பட்டால் உங்களது எண்ணம் என்னவாக இருக்கும். 

அதுவும் அது அந்த நபருக்கு வாழ்க்கையிலேயே கிடைத்த முதல் வேலை அது தான். இப்படி ஒரு சம்பவம் தலைநகர் டெல்லி நடந்துள்ளது.

வேலை கிடைத்து உற்சாகமாக அலுவலகம் சென்று வந்த முதல் நாளிலேயே தனக்கு கிடைத்த முதல் வேலையை ராஜினாமா செய்த நபரே இது தொடர்பாக சோஷியல் மீடியாவில் போஸ்ட் செய்துள்ளார். 

இந்த இளைஞனின் இந்த முடிவு பெரும்பாலான நெட்டிசன்களை ஆச்சரியமடைய செய்துள்ளது. Reddit-ல் இது தொடர்பாக ஷேர் செய்யப்பட்ட போஸ்ட் பற்றி தற்போது பார்க்கலாம்.

டெல்லியைச் சேர்ந்த ஒரு இளைஞன் குருகிராமில் உள்ள நிறுவனம் ஒன்றில் தனது முதல் வேலையைப் பெற்றார். நல்ல சம்பளத்துடனான வேலை தான் அது. 

சில சுற்று நேர்காணலுக்குப் பிறகு உடனடியாக குறிப்பிட்ட இளைஞரை நிறுவனம் வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது தனது முதல் வேலை என்பதால் அந்த இளைஞர் மிகவும் உற்சாகமடைந்துள்ளார்.

டெல்லியின் வடமேற்கு பகுதியில் (பிங்க் லைன்) வசிக்கும் இந்த குறிப்பிட்ட இளைஞர், வேலை கிடைத்த பிறகு தான் குருகிராமின் Moulsari Avenue பகுதியில் அமைந்துள்ள தனது அலுவலகத்திற்கு வீட்டிலிருந்து தினசரி பயணித்து செல்வது என்பது மிகவும் கடினமாக இருக்கும் என்பதை உணர்ந்துள்ளார். 

பழங்களில் இரசாயனக் கலவை… பழத்தை கழுவுவது எப்படி?

இது தொடர்பாக அந்த இளைஞர் தனது போஸ்டில், தினசரி வேலைக்கு நீண்ட பயணம் செய்து நேரம் வீடு திரும்பிய பின் வீட்டில் ஓய்வெடுக்க சில மணி நேரங்கள்  மட்டுமே எனக்கு கிடைக்கும் என்பதை உணர்ந்தேன். 

தவிர மாதாந்திர பயணச் செலவுகள் 5 ஆயிரத்தை தாண்டும் என்பதும் எனக்கு கவலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து வேலைக்கு சேர்ந்த முதல் நாளே எனக்கு கிடைத்த முதல் வேலையை ராஜினாமா செய்து விட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

இவரது போஸ்ட்டை பார்த்த பல Reddit யூஸர்கள் பயண நேரத்தை யோசித்து ராஜினாமா செய்த இளைஞருக்கு தகுந்த அறிவுரைகளை கமெண்ட்ஸ் மூலம் வழங்கி இருக்கிறார்கள். 

அவருக்கு கமெண்ட்ஸ் செய்த பலர் பயணம் செய்வதில் தாங்கள் எதிர்கொள்ளும் சவால்களை விவரித்தனர். 

வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு அருகில் வீடு அல்லது ரூம் எடுத்து தூங்குவதில் இருந்து பயணிக்கும் போது புத்தகங்களை படிப்பது போன்ற பயனுள்ள செயல்பாடுகளில் ஈடுபடுவது வரை பல பரிந்துரைகளை நெட்டிசன்கள் அவருக்கு வழங்கினர்.

பயணத்தின் போது புதிதாக ஏதாவது கற்று கொள்ள அல்லது பிடித்த திரைப்படங்களைப் பார்க்க நேரத்தை பயன்படுத்துங்கள். 

ஏனென்றால் என்னை போல பலரும் அலுவலகத்திற்கு சென்று வீடு திரும்ப சராசரியாக நாளொன்றுக்கு 4 முதல் 5 மணி நேரங்கள் பயணிக்கிறோம் என்று ஒரு யூஸர் குறிப்பிட்டுள்ளார். 

இது ஒன்றும் கவலைப்பட வேண்டிய விஷயமல்ல, நாடு முழுவதும் பல லட்சக்கணக்கான மக்கள் தினசரி அலுவலகம் செல்ல பல மணி நேரங்கள் செலவழிக்கிறார்கள் எனறு சில யூஸர்கள் காட்டமாக கமெண்ட்ஸ் செய்திருந்தனர்.

தனது போஸ்ட்டிற்கு வந்த பெரும்பாலான கமெண்ட்ஸ்களை படித்த பின் குறிப்பிட்ட இளைஞருக்கு ஒன்று நான்றாக புரிந்து விட்டது. 

பறவை குஞ்சுக்கு உணவு வழங்கும் புகைப்படம் உலகையே உலுக்கியது ஏன்?
அது என்னவென்றால் தான் அவசரப்பட்டு விட்டோம் என்று. ஐகானை தொடர்ந்து அவர் தனது போஸ்ட்-ஐ எடிட் செய்து நான் தவறு செய்து விட்டேன். 

மற்ற அனைவரும் இவ்வளவு பயணம் செய்வதை நான் அறிந்திருக்க வில்லை. இது தொடர்பாக யோசனை கேட்க என்னிடம் பேச யாரும் இல்லை, அதனால் நான் இப்படி ஒரு அவசர முடிவை எடுத்து விட்டேன் என பதிவிட்டுள்ளார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings