கழுத்துக்கு பின்னாடி வேர்க்குது... மெத்தை சூட்டை உமிழுமா? உறிஞ்சுமா?

0

இப்போ கொளுத்தும் வெயிலுக்கு மெத்தையில் படுத்த உடனே முதுகு வியர்த்து நனைந்து விடுகிறது. தலையணையில் கழுத்து ஒட்டிய மாதிரி சாய்ந்திருந்தால், குளித்த மாதிரியாகி விடும். 

கழுத்துக்கு பின்னாடி வேர்க்குது... மெத்தை சூட்டை உமிழுமா? உறிஞ்சுமா?
எனக்கு தெரிந்த வரையில் மெத்தை எப்போதும் தனியாக உஷ்ணத்தினை வெளியிடுவ தில்லை. ஆனால் ரொம்ப நேரம் படுத்திருக்கும் போது, நம்முடைய உடம்பில் உண்டாக்கிய வெப்பம், மெத்தை முழுவதையும் சேர்த்து சூடாக்கி விடுகிறது. 

சும்மா பிளாஸ்டிக் சேரில் 5 நிமிடம் உட்கார்ந்து எழுந்து, அந்த இடத்தை தொட்டுப்பாருங்க. உங்களுக்கே உடல் சூட்டின் நிலை புரியும். 

5 நிமிடம் உட்கார்ந்தாலே அந்த நிலமை என்றால், அதே வெப்ப நிலையில் தொடர்ந்து படுத்து இருந்தோமானால், ரொம்ப சங்கடமா இருக்கும். ஆனால் இது போன்ற சிரமங்களை தவிர்க்க நிறைய மெத்தைகள் வந்து விட்டன. 

இது போன்ற மெத்தையை நான்கு கவனித்தால் தெரியும். ஒரு பக்கம் காயர் எனப்படும் தேங்காய் நாரில் செய்யப் பட்டிருக்கும். மற்றொரு பக்கம் ஸ்பான்ஜ் எனப்படும் பொருளினால் தயாரிக்கப் பட்டிருக்கும். 

குளிர் காலத்தில் ஸ்பான்ச் உள்ள பகுதி மேல் பக்கமாகவும், வெயில் காலத்தில் தேங்காய் நார் உள்ள பகுதி மேல் பக்கமாகவும் மாற்றி பயன்படுத்த வேண்டும். 

ஆனால் பெரும்பாலான வீடுகளில் மெத்தை வாங்கியதில் இருந்து ஒரு பக்கமாகவே உபயோகித்துக் கொண்டிருப்பார்கள். 

அத்திக்காய் உண்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

இது போல அதிகமான நேரம் மெத்தையை உபயோகிக்கும் பொழுது உடல் சூடு அதிகமாக இருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் மெத்தையை மாற்றிப் போட்டு பயன்படுத்தி பார்த்தால் கொஞ்சம் மாற்றம் தெரியும். 

எனக்கும் இதுபற்றி நண்பர் ஒருவர் சொன்ன பிறகே தெரியும். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings