பல நாடுகளை வாங்கக் கூடிய அளவுக்கு நகை வைத்திருந்த அரச குடும்பம் !

0

இந்திய அரச குடும்பங்கள் மூச்சடைக்கக் கூடிய கோட்டைகள் மற்றும் அரண்மனைகள் உட்பட பெரும் செல்வத்தைக் கொண்டிருந்தனர். அவர்கள் வைத்திருந்த நகையின் மதிப்பே உலகின் பல நாடுகளை வாங்கக்கூடிய அளவுக்கு இருந்தது. 

பல நாடுகளை வாங்கக் கூடிய அளவுக்கு நகை வைத்திருந்த அரச குடும்பம் !
அவற்றில் பெரும்பாலான நகைகள் படையெடுப்பால் திருடு போயின. அதனை யெல்லாம் தாண்டி, பத்திரப் படுத்தி வைத்திருந்த நகைகளின் பட்டியலை பார்க்கலாம்.

மகாராஜா துலீப் சிங்கின் வைர சர்பெக் : .

சீக்கியப் பேரரசின் கடைசி மகாராஜாவான லாகூர் மகாராஜா துலீப் சிங்கின் வைர சர்பெக்  (தலைப் பாகைக்கான துணை). மூன்று அணிகலனும்  முழுக்க முழுக்க வைரங்களால் செய்யப் பட்டிருக்கும். நடுவில் மரகதம் வைக்கப் பட்டுள்ளது. 

சித்த வைத்திய முறை !

மகாராஜா பூபிந்தர் சிங்கின் பாட்டியாலா நெக்லஸ் : .

பல நாடுகளை வாங்கக் கூடிய அளவுக்கு நகை வைத்திருந்த அரச குடும்பம் !

உலகின் 7வது பெரிய வைரமான 234 காரட் மஞ்சள் நிற 'டி பீர்ஸ்' மையத்தில், மொத்தம் 2,930 வைரங்களில் இருந்தது. 1928 இல் பாட்டியாலா மகாராஜா பூபிந்தர் சிங்கிற்காக, கார்டியர் பாரிஸால் உருவாக்கப்பட்டது. 

பாட்டியாலா மகாராணிக்கு சொந்தமான பாட்டியாலா ரூபி சோக்கர் : .

பல நாடுகளை வாங்கக் கூடிய அளவுக்கு நகை வைத்திருந்த அரச குடும்பம் !

1931 ஆம் ஆண்டில் கார்டியரால் உருவாக்கப்பட்டது. இது மாணிக்கங்கள், முத்துக்கள் மற்றும் வைரங்களைப் பயன்படுத்தி பிளாட்டினத்தில் செய்யப்பட்ட நெக்லஸ் ஆகும். 

நெக்லஸின் மேல் பகுதியில் ஆறு அடுக்கு மாணிக்கக் கற்களும், வைரங்களும் முத்துகளும் இருந்தன.

காஷ்மீரி இளவரசிகள் அணியும் டயடம் : .

பல நாடுகளை வாங்கக் கூடிய அளவுக்கு நகை வைத்திருந்த அரச குடும்பம் !

மூன்று துண்டுகள் கொண்ட கிரீடம் அல்லது அரை கிரீடம் காஷ்மீரி இளவரசிகளால் அணியப்பட்டது.  இந்த அரச நகைகள் 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. 

அறுகம்புல்லின் மருத்துவ குணம் !

பரோடா ராணியின் நெக்லஸில் தென் வைர நட்சத்திரம் : .

78.5 காரட் வைரத்தை கொண்டிருந்த இந்த நெக்லஸ், 128 காரட் நட்சத்திர வைரம் கொண்டு அலங்கரிக்கப்பட்டது. இது பரோடாவின் மகாராணி சீதா தேவி வசம் இருந்தது. பின்னர், மும்பையைச் சேர்ந்த ருஸ்டோம்ஜி ஜம்செட்ஜி 2002 இல் ஸ்டார் ஆஃப் சவுத் வாங்கி கார்டியருக்கு விற்றார்.

பரோடா முத்து நெக்லஸ் : .

பல நாடுகளை வாங்கக் கூடிய அளவுக்கு நகை வைத்திருந்த அரச குடும்பம் !
1860 ஆம் ஆண்டு பரோடாவின் மஹாராஜா கந்தே ராவ் கெய்க்வாட் என்பவரால் உருவாக்கப்பட்ட 7 இழைகள் கொண்ட அழகான நெக்லஸ், உருவாக்கப்பட்டு 150 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட அதன் பொலிவை இழக்கவில்லை.

நவநகர் மகாராஜாவின் மரகத மாலை : .

பல நாடுகளை வாங்கக் கூடிய அளவுக்கு நகை வைத்திருந்த அரச குடும்பம் !

நவாநகரின் மகாராஜா (இன்றைய குஜராத்தில் உள்ள ஜாம்நகர்) 277 காரட் எடையுள்ள 17 செவ்வக வடிவ மரகதங்களால் செய்யப்பட்ட மரகதம் மற்றும் வைர நெக்லஸை வைத்திருந்தார். 

மகாராஜா பூபிந்தர் சிங்கின் வைரத்தால் அலங்கரிக்கப்பட்ட சர்பெக் : .

பாட்டியாலாவின் மஹாராஜா பூபிந்தர் சிங், வைர கற்களால் அலங்கரிக்கப்பட்ட சர்பெக் வைத்திருந்தார். 

$1,70,000-க்கு ஏலம் போனது. ஆங்கிலேய பாணி கிரீடங்களை அணிவதை ஆங்கிலேயர்கள் தடை செய்த பின்னர், மகாராஜாக்கள் தலைப்பாகை அணிந்திருந்ததால், இந்த நகை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.  

நினைவு இழப்பைத் தடுக்கும் தூக்க ஹோர்மோன் !

தங்க காதணிகள் கிமு 1 ஆம் நூற்றாண்டு : .

பல நாடுகளை வாங்கக் கூடிய அளவுக்கு நகை வைத்திருந்த அரச குடும்பம் !

சாதவாகனர் வம்சத்தைச் சேர்ந்த, இந்த ஜோடி பிரமாண்டமான காதணிகள், காது மடல்கள் வரை நீண்டு இருக்கும். ஆந்திராவில் கண்டுபிடிக்கப் பட்டது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings