ஒரே ஜாடையில் பள்ளி தோழி.. மனதை உருக்கும் கதை !

0

இரண்டு தாய் தந்தையர்களை கொண்ட இளம் பெண் ஒருவரின் கதை இணைய தளத்தில் மிகுந்த உருக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது. அந்த பெண்ணின் குழந்தை பருவத்திலேயே வேறொரு தம்பதியரால் கடத்தப்பட்டு வளர்க்கப் பட்டிருக்கிறார். 

ஒரே ஜாடையில் பள்ளி தோழி.. மனதை உருக்கும் கதை !
பின்னாளில் தனது உண்மையான தாய் தந்தையரை கண்டுப்பிடித்து அவர்களுடன் இணைந்துள்ளார். மிக்கே ஸீபானி ஷெல்டன் என்ற இளம் பெண்ணுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. 

தன்னை வளர்த்த கடத்தல் தந்தை மற்றும் தன்னை பெற்றெடுத்த உண்மையான தந்தை ஆகிய இருவருடனும் இவர் மணமேடைக்கு வருகை தந்தார். 

உப்பு என்ன செய்ய போகிறது என்று நினைக்க வேண்டாம் !

முன்னதாக, 1997 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி, இந்த பெண்ணுக்கு மூன்று வயது இருக்கும் போது, கேப்டவுனில் உள்ள குரூப் சுச்சூர் என்ற மருத்துவ மனையில் லவோனா சாலமன் என்ற பெண் மூலமாக கடத்தப்பட்டார். 

குழந்தையை தவறவிட்ட உண்மையான பெற்றோர், பல வகையில் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. இதற்கிடையே லவோனா சாலமன் மற்றும் அவரது கணவர் மைக்கேல் மூலமாக  குழந்தை வளர்க்கப்பட்டது.

லவோனா மற்றும் மைக்கேல் ஆகியோர் தன்னுடைய உண்மையான பெற்றோர் அல்ல, அவர்கள் வளர்ப்பு பெற்றோர் மட்டுமே என்ற விவரம் மிக்கேவுக்கு தெரியாது. 

2015 ஆம் ஆண்டில் அவரது ஒட்டுமொத்த வாழ்க்கையிலும் மாபெரும் திருப்புமுனை ஒன்று அமைந்தது. மிக்கே படித்து வந்த அதே பள்ளியில், கிளாசிடி என்ற மற்றொரு சிறுமி சேர்ந்தார். 

இந்த இரண்டு பெண்களுக்கு இடையே ஜெராக்ஸ் எடுத்து வைத்ததைப் போல முக ஒற்றுமை காணப்பட்டது. 

இதனால் எழுந்த ஆச்சரியங்களுக்கு மத்தியில், பள்ளியில் உள்ள சமூக நலப் பணியாளர்கள் இந்த இருவரையும் டிஎன்ஏ பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தினர். 

இந்த பரிசோதனையில் கிளாசிடி, மிக்கேவின் உடன் பிறந்த சகோதரி என்ற தகவல் உறுதியானது. 

மேலும் லவோனா மற்றும் மைக்கேல் ஆகிய இருவரும் மிக்கேவின் உண்மையான பெற்றோர் அல்ல என்பதும், அந்தப் பெண்ணை அவர்கள் கடத்திக் கொண்டு வந்து வளர்த்தனர் என்பதும் ஒட்டு மொத்த சமூகத்திற்கு தெரிய வந்தது.

இந்த நிலையில், லவோனா மீது குழந்தையை கடத்தியதாக வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. 

அதே சமயம், மிக்கே தொடர்ந்து மைக்கேலிடம் வளர்ந்து வந்தார். தன்னுடைய உண்மையான தாய் தந்தை யார் என்று தெரிய வந்த போதிலும், திடீரென்று அந்த உண்மையை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

இத்தனை ஆண்டு காலம் தன் மீது மிகுந்த பாசம் வைத்து வளர்த்த வளர்ப்பு தந்தையை மிக்கே பிரியவில்லை. இருப்பினும் உண்மையான தாய் தந்தையர் மீது கொஞ்சம் பரிவு ஏற்பட தொடங்கியது. 

ஸ்விம்மிங் பூல் தண்ணீரால் உடலுக்கு வரும் ஆபத்து என்ன?

ஆனால் இரண்டு குடும்பங்களுக்கு இடையில் விரோத போக்கு நீடித்து வந்த நிலையில், இரண்டு பக்கமும் ஒட்ட முடியாமல் மிக்கே தவித்து வந்தார். 

இந்த நிலையில் ஜஸ்டின் என்பவருடன், மிக்கேவுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. 

அப்போது அவர் வேண்டி விரும்பி முன் வைத்த சிறப்பு கோரிக்கையை உண்மையான பெற்றோரும், வளர்ப்பு தந்தையும் ஏற்றுக் கொண்டனர். 

அதன்படி உண்மையான தந்தை மற்றும் வளர்ப்பு தந்தை ஆகிய இருவரின் கரங்களைப் பற்றிக் கொண்டு அவர் மணமேடைக்கு வருகை தந்தார். இந்த காட்சி சமூக வலை தளங்களில் வைரலாகியது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings