ஆன்லைனில் ஏமாந்து போகாமல் ஷாப்பிங் செய்வது எப்படி?

0

இணையத்தின் மூலமாக சேலைகளோ மற்ற ஆடைகளோ நகைகளோ வாங்கி திருப்தி அடைந்தவர்களை காட்டிலும்  புடவையின் நிறம் ஆர்டர் செய்தது போல இல்லை, தரம் இல்லை என புலம்பி தள்ளியவர்கள் தான் அதிகம்.  

ஆன்லைனில் ஏமாந்து போகாமல் ஷாப்பிங் செய்வது எப்படி?
சில சமயம் சாப்ட் சில்க் அல்லது பார்த்தாலே காஸ்லியான புடவை என தெரியும் ரகங்கள் ஆஃபர் என்ற பெயரில் அடிமட்ட விலையில் விற்பனை செய்யப்படும் போது, அய்யா! ஆஃபர் என அடித்து புடித்து ஆர்டர் செய்து கொண்டு காத்திருப்போம். 

நாலு நாளில் கையில் வரவேண்டிய புடவை ஆஃபர் என்பதால் பத்து நாட்களுக்கு பிறகு வந்து சேரும். நாமும் அறக்கபறக்க திறந்து பார்த்தால் நம் மனது எதிர் பார்த்ததற்கும் வந்ததற்கும் ஒரு சதவீதம் கூட சமந்தம் இருக்காது. 

(getCard) #type=(post) #title=(You might Like)

மீண்டும் அதனை ரிட்டன் செய்து விட்டு காசு வந்தால் போதும் என்ற மனநிலைக்கு வந்து விடுவோம்.  ஆஃபர் ஆடைகளுக்கு மட்டும் தான் இந்த ஏமாற்றம் என்றில்லை. 

பொதுவாக ஆன்லைனில் புடவை வாங்கும் அனைவரும் நேர்கொள்ளும் பிரச்சனை தான். அப்போது எப்படித்தான் ஆன்லைனில் பர்சேஸ் செய்வது என்ற குழப்பம் இருக்கும். 

ஆன்லைனில் ஏமாந்து போகாமல் ஷாப்பிங் செய்வது எப்படி?

அதற்கு தீர்வாக முடிந்தவரை ரிவ்யூக்களை பார்த்து வாங்குவது நல்லது. இதை தவிர விலையும் குறைவாக இருக்க வேண்டும் அதே நேரம் தரமும் எதிர்பார்க்கப் பட்டது போல் இருக்க வேண்டும் என்றால் மிந்த்ரா, பீச் மோட் இரண்டு தளங்களும் சரியான தேர்வு. 

கெமிக்கல் ஏதும் இல்லாத அற்புதமான ஷேவிங் க்ரீம் வீட்டிலேயே செய்ய !

கிராஃப்ட் வில்லா, உச்சவ் ஃபேஷன், அஜியோ, வூனிக் போன்ற தளங்கள் பாதுகாப்பானதும் தரமானதும் கூட. ரிஸ்க் எல்லாம் வேண்டாம். 

ஆடை தரமானதும் முக்கியமாக எதிர்பார்த்து போல இருக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு மேற்கண்ட தளங்கள் சரியானது.   

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings