பனி மூடிய இமயமலையை விண்வெளியில் இருந்து கண்டு பிரமித்த வீரர் !

1

ஐக்கிய அரபு அமீரக விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பனி படர்ந்த இமாலயத்தின் பிரமிப்பூட்டும் காட்சியைப் படம் பிடித்துள்ளார்.

பனி மூடிய இமயமலையை விண்வெளியில் இருந்து கண்டு பிரமித்த வீரர் !
ஐக்கிய அரபு அமீரகத்தின் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி, தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருக்கிறார். 

ஆறு மாத விண்வெளி பயணத்தில் ஈடுபட்டுள்ள அவர், விண்வெளியில் இருந்து இமயமலையின் அற்புதமான தோற்றத்தைக் காட்டும் படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

அழிவின் விளிம்பில் பவளப்பாறைகள்... கடலின் பாதுகாவலன் !

சனிக்கிழமையன்று நெயாடி தனது ட்விட்டர் பதிவு ஒன்றில் பனியால் மூடப்பட்ட இமயமலையைக் காட்டும் படங்களை வெளியிட்டார். 

இமயமலையை நமது கிரகத்தின் வளமான இயற்கையின் அடையாளங்களில் ஒன்று எனப் பாராட்டிப் பதிவிட்டுள்ள அவர், தன் ட்வீட்டில் இரண்டு படங்களை இணைத்துள்ளார்.

இந்தப் படங்களில் மேகங்கள் போர்த்திய இமய மலையை காண முடியும். இமய மலையின் இந்த எழில் மிகுந்த தோற்றம் சமூக வலைத்தளங்களில் அனைவரையும் கவர்ந்துள்ளது. 

இதனால், நெயாடியின் ட்வீட் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி இருக்கிறது. விண்வெளியில் இருந்து இமயமலையின் தோற்றம். கடல் மட்டத்திலிருந்து மிக உயரமான இடமான எவரெஸ்ட் சிகரத்தின் தாயகம் பூமி. 

இந்த மலைகள் நமது கிரகத்தின் செழுமையான இயற்கையின் அடையாளங்களில் ஒன்றாகும் என்று தனது பதிவில் எழுதியிருக்கிறார் நெயாடி.

இதற்கு பதில் அளித்துள்ள ஒரு ட்விட்டர் பயனர், இயற்கையின் மகத்தான, தலைசிறந்த படைப்பு என்று கூறியுள்ளார்.  இன்னொருவர், அற்புதம் சகோதரரே. 

இந்த நீல கிரகத்தில் எங்கள் வாழ்க்கையின் அழகிய புகைப்படங்களை எங்களுக்கு தொடர்ந்து அனுப்புவதற்கு மிக்க நன்றி என்று தெரிவித்துள்ளார். 

நெயாடி விண்வெளிக்குச் சென்றதில் இருந்து அவ்வப்போது இதே போல பூமியின் படங்களைப் பகிர்ந்து வருகிறார் என்பது சுட்டிக்காட்டத் தக்கது.

தங்க பஸ்பம் அல்லது தங்க பற்பம் என்றால் என்ன?

கடந்த ஜூன் மாதம் பிபோர்ஜாய் புயலின் விண்வெளி காட்சியை படம் பிடித்து பகிர்ந்திருந்தார். முன்னதாக ஏப்ரல் மாதம் ரமலான் பண்டிகையை முன்னிட்டு விண்வெளியில் இருந்து பூமிக்கு ரமலான் வாழ்த்து கூறி வீடியோ வெளியிட்டிருந்தார். 

அல் நெயாடி ஏற்கெனவே 2019ஆம் ஆண்டு அமீரகம் சார்பில் விண்வெளிக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டிருந்தார். 

அதன் மூலம் அரபு நாடுகளில் இருந்து முதல் முறையாக விண்வெளிக்குச் சென்றவர் என்ற பெருமையைபை் பெற்றார். இதனால், அவர் சுல்தான் அல் நெயாடி என்று அழைக்கப் படுகிறார்.

Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

  1. அருமையான புகைப்படம் சூப்பர்

    ReplyDelete
Post a Comment
Privacy and cookie settings