போலீஸ் படைக்கு இத்தனை கார்களா... காரின் விலையே இத்தன லட்சம் !

2

ரோந்து செல்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபடுவதற்கு காவல் துறையினருக்கு கார்கள் அவசியமாகின்றன. எனவே பல்வேறு நிறுவனங்களின் கார்களை காவல் துறையினர் பயன்படுத்தி வருகின்றனர்.

போலீஸ் படைக்கு இத்தனை கார்களா... காரின் விலையே இத்தன லட்சம் !
அவர்களின் பணியை மேம்படுத்தும் வகையில், அவ்வப்போது புதிய கார்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் டெல்லி காவல் துறைக்கு தற்போது புதிய கார்கள் வழங்கப் பட்டுள்ளன.

டெல்லி காவல் துறைக்கு புதிதாக 850 கார்களை வழங்குவதற்கு சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. 

வீட்டில் பிரசவம் பார்ப்பது ஆபத்து என்று எச்சரிக்கும் மருத்துவர் !

இதன்படி டெல்லி காவல் துறைக்கு 300 மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) கார்களும், 200 மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) கார்களும், 100 மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) கார்களும் வழங்கப்பட வுள்ளன.

இதுதவிர 250 டொயோட்டா இன்னோவா (Toyota Innova) கார்களும் டெல்லி காவல் துறைக்கு வழங்கப்படவுள்ளது. ஆக மொத்தத்தில் டெல்லி காவல் துறைக்கு 850 புதிய கார்கள் கிடைக்கவுள்ளன. 

இதில் முதற்கட்டமாக 250 புதிய கார்கள், டெல்லி காவல் துறைக்கு தற்போது வழங்கப் பட்டுள்ளன. இதில், 100 மாருதி சுஸுகி எர்டிகா கார்களும், 150 மஹிந்திரா பொலிரோ கார்களும் அடங்கும். 

டெல்லி கவர்னர் (Governor) விகே சக்ஸேனா (VK Saxena) இந்த புதிய கார்களின் பயன்பாட்டை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார். 850 புதிய கார்களின் ஒரு பகுதியாக தற்போது 250 கார்கள் வழங்கப் பட்டுள்ளன.

எஞ்சிய 600 கார்களும் டெல்லி காவல் துறைக்கு எப்போது கிடைக்கும்? என்பது உறுதியாக தெரியவில்லை. 

டெல்லி காவல் துறைக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள மாருதி சுஸுகி எர்டிகா காரானது, எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்தது ஆகும். மறுபக்கம் மஹிந்திரா பொலிரோ காரானது, எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்தது ஆகும்.

இதில் மாருதி சுஸுகி எர்டிகா காரானது பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்களில் கிடைத்து வருகிறது. தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி எர்டிகா காரின் ஆரம்ப விலை (Price) 8.64 லட்ச ரூபாயாக உள்ளது. 

அதே சமயம் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.08 லட்ச ரூபாயாக இருக்கிறது. மறுபக்கம் மஹிந்திரா பொலிரோ காரானது, டீசல் (Diesel) இன்ஜின் ஆப்ஷனுடன் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

இந்த காரின் ஆரம்ப விலை 9.78 லட்ச ரூபாய் ஆகவும், டாப் வேரியண்ட்டின் விலை 10.79 லட்ச ரூபாய் ஆகவும் இருக்கிறது. நாங்கள் இங்கே குறிப்பிட்டுள்ளவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் விற்பனையாகி கொண்டுள்ள எம்பிவி ரக கார் என்ற பெருமையை மாருதி சுஸுகி எர்டிகா தன்வசம் வைத்துள்ளது. 

மறுபக்கம் பொலிரோ காரானது, அதிகம் விற்பனையாகும் மஹிந்திரா கார்களில் ஒன்றாக திகழ்கிறது. இந்த கார்கள் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டிருப்பது, அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.

Tags:

Post a Comment

2Comments

Thanks for Your Comments

  1. அருமை வாழ்க காவல் துறை வளர்க காவல் பணி

    ReplyDelete
  2. சூப்பர்

    ReplyDelete
Post a Comment
Privacy and cookie settings