எங்கள் குடும்பத்தில் 6 பேரில் ஆண்கள் மூன்று பேரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள், கடைசி தங்கை, இக்னேசியஸ் டெலாஸ் புளோரா இந்திய ராணுவ மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்ற முதல் தமிழ்ப் பெண்.
இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பதவி உயர்வு பெற்றுள்ள இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூர் வடக்கூர் ஆகும்.
சிகரெட் பிடிச்சு உதடு ரொம்ப கருப்பா இருக்கா?
இவருடைய தந்தை லூர்துசாமி பிள்ளை, தாய் தெரசம்மாள். 1965-ம் ஆண்டு பிறந்த இவருக்கு 3 சகோதரர்கள் மற்றும் 2 சகோதரிகள். இதில் சகோதரர்கள் மூன்று பேரும் இந்திய ராணுவத்தில் பணியாற்றியவர்கள்.
அவர்களில் மூத்த சகோதரரான அந்தோணி சாமி 40 ஆண்டுகள் இந்திய விமானப் படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். 2-வது சகோதரரான ஜாண் பிரிட்டோ எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இது குறித்து அந்தோணி சாமி கூறுகையில், இக்னேசியஸ் டெலோஸ் புளோரா பள்ளி படிப்பை முடித்தவுடன் தனது அறிவுரைப்படி
திருவனந்த புரத்தில் நடைபெற்ற இந்திய ராணுவ செவிலியர் சேவை பிரிவு பணிக்கான எழுத்து தேர்வை எழுதி அதில் தேர்வானார்.
பின்னர் அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி பதவி உயர்வு பெற்று வந்தார். இந்த நிலையில் செவிலியர் பிரிவில் முதன்மை இடமான மேஜர் ஜெனரல் பதவி உயர்வை பெற்றுள்ளார்.
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் !
இக்னேசியஸ் டெலோஸ் புளோராவின் கணவர் இக்னேசியஸ் ஜான். இவர் ஓய்வு பெற்ற பேராசிரியர். இவர்களுக்கு மைக்கேல் ஜெகன், ஜெசன் ஆகிய 2 மகன்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments