நடிகர் விஜயகாந்த் நடிகராகவும் அரசியல் பிரமுகராகவும் பலருக்கும் பரிச்சயமாகி இருக்கும் நிலையில் அவருடைய மகன் அப்பா பற்றி பல தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.
நடிகர் விஜயகாந்த் ஹேர் ஸ்டைல் முதல் ஆடை அலங்காரங்கள் வரை பலர் அவரை காப்பி செய்து வந்திருக்கிறார்கள்.
அந்த நேரத்தில் ரஜினி கமல் போன்றோர்கள் முன்னணி நடிகர்களாக இருந்தாலும் நடிகர் விஜயகாந்தின் சண்டைக் காட்சிகளுக்கு யாராலும் ஈடு கொடுக்க முடியாது என்பது ரசிகர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
இந்த நிலையில் அவருடைய போதாத காலம் உடல்நிலை சரியில்லாமல் போனதால் நடிப்பில் இருந்தும் அரசியலில் இருந்தும் விலகி இருக்கிறார்.
இந்த நிலையில் கம்பீரமாக விஜயகாந்தை பார்த்த ரசிகர்களால் அவருடைய தற்போதைய தள்ளாடிய நிலைமையை பார்க்க முடியவில்லை என்று பதறி வருகின்றனர்.
ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சக மனிதர்களை சமமாக பாவிக்கும் உயர்ந்த குணம் விஜயகாந்த்திடம் அதிகமாக இருந்தது என்று சாதாரண ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவரோடு நெருங்கி பழகிய பல பிரபலங்கள் தொடர்ச்சியாக கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஜயகாந்தின் தற்போதைய பிறந்த நாளுக்கு பிறகு அவருடைய மகன் மற்றும் மனைவி பல youtube சேனல்களுக்கு பேட்டி எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அது போல நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று அவருடைய மகன் சண்முக பாண்டியன் நடித்த திரைப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்திருந்தது.
அது போல விஜயகாந்துக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பிறகு அவரை குளிக்க வைப்பது, சாப்பாடு ஊட்டுவது, பாத்ரூம் கூட்டிட்டு போகிறது போன்ற வேலைகளை அவருடைய மகன்கள் தான் பார்த்து வருகிறார்கள் என்று பிரேமலதா கூறி இருக்கிறார்.
அந்த வகையில் நாங்கள் நல்ல மகன்களை பெற்றிருக்கிறோம் என்று அவர் பெருமையாக பேசி இருக்கிறார். அதே நேரத்தில் தன்னுடைய அப்பாவை பற்றி சண்முக பாண்டியன் பெருமையாக பேசி இருக்கிறார்.
அந்த வகையில் ஒரு முறை அப்பா எனக்காக செய்ததை என்னால் மறக்கவே முடியாது. நாங்கள் வெளிநாட்டிற்கு டூர் போயிருந்தோம். அப்போது நான் அம்மாவுடன் இருந்து தொலைந்து விட்டேன்.
அந்த நேரத்தில் எனக்கு மூன்று அல்லது நான்கு வயது இருக்கும். தொலைந்த இடத்தில் இருந்து அம்மா இருக்கும் இடத்திற்கு போவது கஷ்டம். அந்த இடத்தில் நான் அங்கே இங்கே நடந்து கொண்டே இருக்கிறேன்.
அது போல என்னை காணாமல் என்னுடைய அம்மாவும் இன்னொரு இடத்தில் அழுது கொண்டு இருந்திருக்கிறார். அந்த நேரத்தில் எனக்கு பின்னாடி இருந்து ஒரு குரல் கேட்டது.
என்னுடைய அப்பா கம்பீரமாக அங்கே வந்து என்ன இங்க நின்னுகிட்டு இருக்க வா போகலாம் என்று கையை பிடித்து கூட்டிட்டு போனார். அந்த நினைவுகள் என்னுடைய மனதில் எப்போதும் இருக்கிறது.
அது மறக்க முடியாத நினைவு என்று கூறியிருக்கிறார். அது போல அப்பாவுக்கு ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருப்பது எங்களுக்கு தெரியும்.
ஆனால் ஒரு முறை அப்பா நடித்த திரைப்படம் ஒன்று எங்கள் ஊர் மதுரையில் தியேட்டரில் வெளியானது. அந்த நேரத்தில் தியேட்டரில் மூன்று நாட்டு வெடிகுண்டு வைத்திருக்கிறார்கள்.
அந்தப் படம் வேறு ஒன்றும் இல்லை கஜேந்திரா திரைப்படம் தான் என்று சண்முக பாண்டியன் கூறி இருக்கும் நிலையில் அப்பாவுடைய பேவரைட் வசனங்கள், பிடித்த பாடல்கள் என அந்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.
இந்த நிலையில் சண்முக பாண்டியன் நடிக்கும் திரைப்படமும் வெற்றியடைய வேண்டும் என்று விஜயகாந்தின் ரசிகர்கள் அதிகமானோர் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
Thanks for Your Comments