இன்றைய மோசமான வாழ்வியல் சூழலில் நமது உடல் நலமானது மிகவும் பாதிக்கப் பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது நாம் எடுத்து கொள்ளும் ஆரோக்கியமற்ற உணவுகள் தான்.
இனி மேலாவது தினமும் வாக்கிங் போகலைனா, நீங்க நிறைய உடல் ரீதியான தொந்தரவுகளைச் சந்திக்க வேண்டி வரும் - இப்படி மருத்துவர் சொல்லி விட்டாரே என்று வேறு வழியின்றி நடைப்பயிற்சியைத் தொடங்குபவர்களே இன்று அதிகம்.
உடலை நோயில்லாமல் வைத்துக் கொள்ள, ஃபிட்டான உடல்வாகுக்கு என ஆரம்பத்திலிருந்தே நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களின் எண்ணிக்கையோ மிக மிகக் குறைவு.
உடல் உழைப்பு வெகுவாகக் குறைந்து விட்ட இன்றைய வாழ்க்கை முறையில், நடைப்பயிற்சி என்பது அனைவருக்கும் அத்தியாவசியம்.
ஆரோக்யம் தருவது சின்ன வெங்காயமா? பெரிய வெங்காயமா?
அரைமணி நேரம் . :
வேலை செய்ய வேண்டிய இடத்துக்கு பல கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்ல வேண்டிய நிலைமை எல்லாம் இன்று இல்லை. வீட்டு வாசலுக்கும்,
அலுவலக வாசலுக்கும் போக்குவரத்துப் புரியும் சொகுசு வாகனங்கள், அலுங்காமல் குலுங்காமல் நம்மைக் கொண்டு சேர்க்கும் பணியை வெகு சிறப்பாகச் செய்கின்றன.
இப்படி உடல் உழைப்புக்கு வாய்ப்பே இல்லாதவர்கள், தினமும் குறைந்தது அரை மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.
(nextPage)
உறுப்புகளுக்கு நம்பிக்கை துரோகம் . :
அவை அனைத்தையும் தாங்கிப் பிடித்திருக்கும் நாம்தான் ஓடாமல், நடக்காமல் உள் உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நம்பிக்கை துரோகம் செய்து கொண்டிருக்கிறோம்.
நடைப்பயிற்சி, உள் உறுப்புகளுக்குத் தேவையான ரத்த ஓட்டத்தையும், பிராண வாயு செறிவையும் ஏற்படுத்தி, சிறப்பாகச் செயல்பட வைக்கும். நோய்கள் வராமல் பாதுகாப்பதற்கு நம்மிடையே இருக்கும் மிக முக்கியச் சாதனம் நடைப்பயிற்சி.
ஆனால், அந்த சாதனத்தை பயன்படுத்தாமல் துருப்பிடிக்க வைத்து விடுவது தான் நோய்களுக்குக் கொண்டாட்டமாகப் போய் விடுகிறது.
நடைப் பயிற்சியின் முக்கியத்துவம், நோயின்றி நம்மை பாதுகாக்க இது எந்தெந்த வகையில் பயன்படுகிறது என்பதை யெல்லாம் பார்ப்போம்.
(getCard) #type=(post) #title=(You might Like)
நடைப்பயிற்சி . :
ஒரு நாளைக்கு எவ்வளவு ஸ்டெப்ஸ் நடக்கிறோம் என்பது குறித்து ஆரம்ப காலத்தில் யோசிக்க வேண்டும். பொதுவாக நடைப் பயிற்சியின் தொடக்க காலத்தில் எவ்வளவு நேரம் செலவிடுகிறோம் என்பது தான் மிகவும் முக்கியம்.
அதே போன்று நடைப்பயிற்சியின் போது எவ்வளவு வேகமாக நடக்கிறோம், நடக்கும் முறை ஆகியவை மிகவும் முக்கியம்.
(nextPage)
ஸ்டெப்ஸ் மற்றும் வேகம் . :
அதிக ஒருவேளை உங்களுக்கு வேகமாக நடப்பதில் சிக்கல் இருந்தால், மெதுவாக நடக்க முயற்சி செய்யுங்கள்.
நீங்கள் எவ்வளவு ஸ்டெப்ஸ் நடந்தீர்கள் என்பதுடன், நீங்கள் நடந்ததற்கான நேரத்தின் கால அளவைக் குறித்து கொள்ளுங்கள்.
இந்த வேகமான நடை பயிற்சியானது அடிவயிற்றின் ஆழமான கொழுப்புகளை குறைக்க உதவுகிறது என்று பல வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
நடக்கும் முறை . :
எடை குறைப்பை மனதில் வைத்துக் கொண்டு நிதானமாக நடக்காதீர்கள். நேரான தோரணையுடன் நடக்க செய்யுங்கள். இப்படி செய்வதால் முழு உடல் தசைகளும் நீட்டப்பட்டு, தீவிரமான செயல்பாட்டிற்கு உதவும்.
இதற்கு உங்கள் கைகளைப் பயன்படுத்த வேண்டும் மற்றும் முன்னோக்கிச் செல்ல வேகத்தையும் பயன்படுத்துங்கள். நீங்கள் நடக்கும் போது உள் உடல் உறுப்புகளை தீவிர பயிற்சிக்கு உட்படுத்துங்கள்.
உருளைக்கிழங்கு பிரியாணி செய்வது எப்படி?
நடைப்பயிற்சி காலம் . :
காலை நேரங்களில் தீவிரமான உடல் பயிற்சிகளை மேற்கொள்வது எப்போதும் உங்களுக்கு சிறந்த பலனை தரும். அமைதி சூழல் மற்றும் நல்ல தரமான காற்று அதிகாலை நேரத்தில் தான் கிடைக்கும்.
எனவே இந்த நேரம் உடற்பயிற்சி செய்தால் இது அதிக பலன்களை தருவதாக கூறப்படுகிறது.
மேலும், காலை நேரத்தில் தங்களுக்கு போதுமான நேரத்தைப் பெறுகிறார்கள். மற்ற நேரங்களில் பெரும்பாலும் வீட்டு மற்றும் அலுவலக வேலைகளில் மும்முரமாக இருப்பார்கள்.
(nextPage)
பலன்கள் . :
சிறு வயது முதலே விளையாட்டுடன் கூடிய நடைப்பயிற்சி, முதுமையைத் தள்ளிப் போடும். சர்க்கரை நோயாளிகள் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம்.
நுரையீரலில் ஆக்ஸிஜன் கொள்ளளவு பன்மடங்கு அதிகரிக்கும் (Increases Lung capacity). எலும்புகளுக்கும் தசைகளுக்கும் வலிமையைக் கொடுக்கும். உடல் எப்போதும் சுறுசுறுப்பாகச் செயல்படும்.
உயிருக்கு உலை வைக்கும் அதிகம் பதப்படுத்தப்பட்ட உணவு !
உடல் எடை குறைக்க நடை போடுபவர்கள், நொறுக்குத் தீனிகளை கொறித்துக் கொண்டே சென்றால், நடப்பதில் எந்தப் பயனும் இல்லை. உடல் பருமனைக் குறைக்க நடைப் பயிற்சியோடு, யோகப் பயிற்சிகளையும் சேர்த்துச் செய்ய்யலாம்.
Thanks for Your Comments