காலணி அணியாமல் நடப்பதால் உபாதைகள் ஏற்படுமா?

0

காலணி அணியாமல் நடப்பதால் நன்மை தான் அதிகமே தவிர‌ தீமை எதுவுமில்லை. உடம்பிலுள்ள எல்லா பாகங்களுக்கும் நரம்பு மண்டலத்தின் தொடர்பு நம் உள்ளங்காலில் உள்ளது. 

காலணி அணியாமல் நடப்பதால் உபாதைகள் ஏற்படுமா?
நீங்கள் காலணி அணியாமல் நடப்பது மூலம் அது தூண்டபடுகிறது. அக்குபிரஷர் மருத்துவத்தில் கூட இதன் பயனை கூறியிருக்கிறார்கள். சமதளம் இல்லாத இடத்தில் வெறும் காலில் நடப்பதால் பல நன்மைகள் உடல் முழுவதும் ஏற்படும். 

உடற்திறன் அதிகரிக்கும், சுறுசுறுப்பு அதிகமாகும், செரிமானம் நன்றாக இருக்கும். வலது மூளை மற்றும் இடது மூளைக்கு இடையேயான பரிமாற்றங்கள் நல்ல படியாக இருக்கும். 

சாதரணமாக இருப்பவருக்கும் உடற்பயிற்சி மேற்கொள்ளா தவருக்கும்‌ இரண்டு மூளைக்கும் இடையேயான தொடர்பு வெறும் காலில் சமதளம் இல்லாத இடத்தில் நடப்பவருக்கு அதிகமாக இருக்கும் என்று 

உலக மருத்துவ ஆராய்ச்சி குழுவினர் கூறியதாக பிரபல ஆங்கில இணைய தளத்தில் படித்தேன். நான் சொல்வது வேடிக்கையாக இருக்கலாம். 

ஆனால் நான் செருப்பு அணிவதில்லை. வெறும் காலிலேயே பல வருடங்களாக நடக்கிறேன்.‌ நான் மாதத்திற்கு 1 அல்லது 2 முறை வேலை செய்யும் ஊரில் இருந்து என் வீட்டிற்கு பைக்கில் செல்வேன். 

அப்போது மட்டுமே செருப்பு அணிந்து கொள்வேன். பைக்கில் சுற்றுலா போகிறேன் என்றால் செருப்பு அணிந்து கொள்வேன். 

இப்போது பாதுகாப்பிற்காக சுற்றுலா போகும் போது மட்டும் சூ(shoe) அணிய ஆரம்பித்துள்ளேன். மத்தபடி வேலைக்கு செல்லும் இடத்திற்கோ அங்கு இருந்து அருகில் உள்ள இடத்திற்கோ செருப்பு அணிந்து செல்வது இல்லை. 

அது மிகவும் நன்றாகவே உள்ளது. வெறும் காலில் தான் வெயிலும் மழையிலும் நடப்பேன். அது மிகவும் ஆரோக்கியமாக மற்றும் சுகாதாரமாகவே உள்ளது. 

வெளியில் சென்று விட்டு வந்தாலோ எங்கு சென்று வந்தாலும் காலை நீரினால் கழுவிவிட்டு தான் வீட்டிற்குள் நுழைவேன் சிறுவயது முதல் பழக்கமாகி உள்ளது. சுத்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க முடிகிறது.

வைரஸ் காய்ச்சலில் இருந்து பாதுகாக்க இந்த செடி போதுமாம் !

உடனே தூய்மை இல்லாத இடத்தில் எப்படி வெறுங்காலில் நடக்க முடியும் என்று கேட்காதீர்கள். தூய்மை இல்லாத இடத்தில் வெறுங்காலில் நடப்பதால் நோய்தொற்று எதுவும் எனக்கு ஏற்பட்டதில்லை. 

நான் அருகில் சாதரணமாக செல்லும் இடத்திற்கு செருப்பு அணியாமல் போகிறேன், அலுவலகம், கடைகள் போகிற போதும் கூட.‌. 

காலணி அணியாமல் நடப்பதால் உபாதைகள் ஏற்படுமா?
ஆனால் வெளியில் எங்காவது செல்கிறேன் என்றால் உதாரணமாக சினிமா தியேட்டர் போகிறேன் என்றால் அணிந்து தான் செல்வேன். முடிந்த அளவு காலணி இல்லாமல் நடக்கவே பழகிக் கொண்டேன்.

இதனால் ஏற்பட்ட பாதிப்பு என்ன வென்றால் குளிர்ந்த தரையில், கிரானைட் பதிக்கப்பட்ட தரை மற்றும் எப்போதும் ஏ.சி ஓடிக்கொண்டிருக்கும் மார்பில் பதிக்கபட்ட தரையில் நடந்ததால் காலில் ஆணி வந்ததது. 

கர்ப்பிணிகள் ஒன்பதாவது மாதத்தில் என்ன சாப்பிட வேண்டும்?

இது உடனடியாக ஏற்படுவது இல்லை. பல நாட்கள், மாதங்கள் இவ்வாறு நடந்தால் தான் ஆணி ஏற்படும். அதற்கான நாட்டு வைத்தியம் செய்து நானே சரிசெய்து கொண்டேன். 

அதன் பிறகு அந்த மாதிரியான இடங்களில் வெறும் காலில் நடப்பது தூங்குவது போன்றவற்றை தவிர்த்து விட்டேன். உங்களை நீங்கள் பூமியுடன் தொடர்ந்து தொடர்பில் வைத்து இருந்தால் அது உங்களுக்கு நன்மையே தரும்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings