விண்வெளியில் ஒருவர் உயிரிழந்தால் அடுத்து அவருக்கு என்ன நடக்கும் என்பது குறித்து அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா விளக்கம் அளித்துள்ளது.
1986 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் நாசா விண்வெளி விண்கலத்தில் 14 பேர், 1971 ஆம் ஆண்டு சோயுஸ் 11 பயணத்தின் போது 3 விண்வெளி வீரர்கள் மற்றும் 1967 இல் அப்பல்லோ 1 ஏவுதளத்தில் தீயில் மூன்று விண்வெளி வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள.
இருப்பினும் மனித குலத்தின் நலனுக்காக விண்வெளி ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா 2025-ல் நிலவுக்கு ஒரு குழுவையும், அடுத்த பத்தாண்டுகளில் செவ்வாய் கிரகத்துக்கு விண்வெளி வீரர்களையும் அனுப்ப திட்டமிட்டுள்ளது.
சர்வதேச விண்வெளி நிலையம் போன்ற குறைந்த பூமி சுற்றுப்பாதை பயணத்தில் யாராவது இறந்தால், குழுவினர் சில மணி நேரங்களில் உடலை பூமிக்கு திருப்பி விடலாம்.
இது சந்திரனில் நடந்தால், குழுவினர் ஒரு சில நாட்களில் உடலுடன் வீடு திரும்பலாம். நாசா ஏற்கனவே இது போன்ற நிகழ்வுகளுக்கான விரிவான நெறிமுறைகளை வைத்திருக்கிறது.
செவ்வாய் கிரகத்திற்கான பயணத்தின் போது, விண்வெளி வீரர் இறந்தால் அந்த சூழ்நிலையில், குழுவினர் திரும்பிச் சென்று விட்டு, மீண்டும் செவ்வாய்க்கு செல்ல முடியாது.
(getCard) #type=(post) #title=(You might Like)
விண்வெளி வாகனத்தின் உள்ளே இருக்கும் நிலையான வெப்பநிலை மற்றும் ஈரப்பதம் உடலைப் பாதுகாக்க உதவும்.
Thanks for Your Comments