வெளிநாட்டில் தான் சம்பாதித்த பணம் செலவழிந்து விட்டதாக பெற்றோர் கூறியதால், விரக்தி அடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தென்காசி மேலவாலி பகுதியைச் சேர்ந்தவர் முத்துசாமி. ஆட்டோ ஓட்டுனராக உள்ளார். இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். இவரது மூத்தமகன் சேதுராமன் (29) பொறியியல் பட்டதாரி.
வெளிநாட்டில் வேலை செய்து விட்டு மூன்று ஆண்டுகளுக்குப் பின்பு இப்போது தான் சொந்த ஊர் திரும்பினார். சேதுராமன் தான் 'சொந்தத் தொழில் தொடங்க விரும்புவதாகவும், வெளிநாட்டில் இருந்து தான் சம்பாதித்து அனுப்பியதில் 2 லட்ச ரூபாயை தருமாறும்' கேட்டார்.
(getCard) #type=(post) #title=(You might Like)
ஆனால் அவரது பெற்றோர்களோ, 'வெளிநாட்டில் இருந்து அவர் அனுப்பிய பணத்தில் இளைய சகோதரன் மணிகண்டனுக்கு திருமணம் செய்து வைத்ததாகவும், அந்த வகையில் அவர் அனுப்பிய பணம் செலவாகி விட்டது எனவும் தெரிவித்தனர்.
இதனால் மன விரக்தியில் இருந்து வந்த சேதுராமன், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த தென்காசி போலீஸார் சேதுராமன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
Thanks for Your Comments