பொதுக்கழிப்பறையில் கதவுக்கு கீழே இடைவெளி இருப்பது ஏன்? தெரியுமா?

0

வீடு அல்லது ஹோட்டல் அறையில் கழிவறை கதவு மேலிருந்து கீழாக சிறிய அளவில் அடியில் இடைவெளி விட்டு வைப்பதில்லை. 

பொதுக்கழிப்பறையில் கதவுக்கு கீழே இடைவெளி இருப்பது ஏன்? தெரியுமா?
ஆனால் ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள், மருத்துவமனைகள் போன்ற பொது கழிப்பறைகளில், கழிப்பறைக்கு தரை வரை முழு கதவு இல்லாமல், தரையை நோக்கிய கீழ் பகுதி சிறியதாக இருக்கும்.

திரையரங்கம், ஷாப்பிங் மால், மருத்துவமனை அல்லது பொதுக் கழிப்பறைக்கு சென்றால், ஒரு விஷயம் கவனித்திருப்பீர்கள்.. 

அங்குள்ள டாய்லெட் கதவுகள் முழுமையாக மூடியில்லாமல் அடியில் பெரிய இடைவெளிவிட்டு சிறிய கதவுகளாக இருக்கும். அதேபோல் மேலேயும் இடைவெளி இருக்கும். ஆனால் வீட்டிலோ அல்லது ஹோட்டல் அறையிலோ அப்படி கதவுகளை வைப்பதில்லை. 

அனைத்து ஆண்களுக்கும் இரண்டு மனைவி... கிராமத்தின் வினோத பழக்கம் !

ஆனால் ஏன் திரையரங்கு அல்லது மால்களின் கழிப்பறை கதவுகள் அப்படி இருப்பதில்லை.? அதற்கான காரணத்தைக் கண்டுபிடிப்போம்.

பொதுக் கழிப்பறையின் அடிப்பகுதியில் இடைவெளி வைப்பது அடிக்கடி அசுத்தமாகும் தரையை சுத்தம் செய்ய வசதியாக இருக்கும். கழிப்பறைக்குள் நுழையாமல் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து விடலாம்.

கழிப்பறையில் உள்ள துர்நாற்றமும் அடிப்பகுதி மூடப்படாததால் விரைவாக வெளியேறும்.

கழிவறைக்குள் இருப்பவருக்கு திடீரென உடல் உபாதை ஏற்பட்டாலோ அல்லது சில காரணங்களால் கீழே விழுந்து விட்டாலோ கீழ் பகுதியிலிருந்து எளிதில் தெரிந்து கொள்ளலாம். கதவு முழுவதுமாக மூடப்பட்டால் உள்ளே என்ன நடக்கிறது என்பதை அறிய முடியாது. 

இரண்டாவதாக, இந்த கதவை இரவும் பகலும் தொடர்ந்து பயன்படுத்துவதால் அடிக்கடி திறந்து மூடுவதால் கதவின் கீழ் பகுதி சேதமடையும் அபாயம் இல்லை. அதனால் தான் பொதுக் கழிப்பறைகளின் கதவுகள் இவ்வாறு செய்யப் படுகின்றன.

பொதுக்கழிப்பறையில் கதவுக்கு கீழே இடைவெளி இருப்பது ஏன்? தெரியுமா?

அது மட்டுமன்றி உள்ளே சென்ற நபருக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் சிக்கலில் மாட்டிக் கொண்டால் அவர்களுக்கு எளிதில் உதவ மேலிருந்தோ அல்லது கீழிருந்தோ தேவையை கேட்டு உதவலாம்.

கீழே கால் தெரிவதை வைத்து உள்ளே ஆள் இருப்பதையும் உறுதி செய்து கொள்ளலாம். இதனால் பின்னே வருவோர் காத்திருந்து பின் செல்ல உதவியாக இருக்கும். 

நீச்சல் தெரிந்தவர்கள் கூட நீரில் ஏன் மூழ்குகிறார்கள்? அதை எப்படி தடுப்பது?

இல்லையெனில் நுழைபவர்கள் சட்டென கதவை திறக்க முயல்வார்கள். அது உள்ளே இருப்பவர்களுக்கு சங்கடமாக இருக்கும் என்பதை தவிர்க்கவும் இவ்வாறு கதவின் அடியில் இடைவெளி விடப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings