வேலூர் அடுத்திருக்கும் இலவம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியையாகப் பணியாற்றியவர் தீபலட்சுமி. இவர், வீட்டுப்பாடம் எழுதாமல் வந்த 7-ம் வகுப்பு மாணவ, மாணவிகளை மரக்கட்டை ஸ்கேலால் அடித்ததாகக் கூறப்படுகிறது.
மாலையில், வீட்டுக்குச் சென்ற மாணவிகளின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்ட பெற்றோர் அதிர்ச்சியடைந்து, சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
பின்னர், நடந்த விவரங்களைக் கேட்டறிந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது விரிஞ்சிபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
மேலும், இது குறித்து துறை ரீதியாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மாவட்ட கல்வி அலுவலருக்கு, முதன்மைக் கல்வி அலுவலர் மணிமொழி உத்தரவிட்டார்.
மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி, இலவசம்பாடி பள்ளிக்கு நேரில் சென்று, காயமடைந்ததாகக் கூறப்பட்ட நான்கு மாணவிகளிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினார்.
பல கோணங்களில் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, குற்றச் சாட்டுக்குள்ளான ஆசிரியை தீபலட்சுமியை சஸ்பெண்ட் செய்து உத்தர விட்டிருக்கிறார் முதன்மைக் கல்வி அலுவலர் மணிமொழி.
Thanks for Your Comments