நாம் வேலை பார்க்கும் காலத்தில் கையில் வாங்கும் சம்பளத்தை வைத்து செலவுகளை சமாளித்து விடலாம். ஆனால் ஓய்வுக் காலத்தில் ஒரு வேளை உணவுக்கே வழியில்லாமல் போகும் சூழல் ஏற்படலாம்.
கணவனை இழந்த பெண்களுக்கு தங்களுடைய வாழ்க்கையில் நிதி ஆதரவு கிடைக்க அரசு தரப்பிலிருந்து விதவை பென்சன் திட்டம் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
பெட்ரோல் டேங்கில் தண்ணீர் புகுந்தால் என்ன தீர்வு !
மத்திய அரசு மட்டுமல்லாமல், பல்வேறு மாநிலங்களிலும் தனித்தனியாக விதவை பென்சன் திட்டங்க உள்ளன. இதில் வழங்கப்படும் பென்சன் தொகை மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும்.
அஸ்ஸாம் மாநிலத்தில் தற்போது விதவை பெண்களுக்கு வழங்கப்படும் பென்சன் தொகை உயர்த்தப்பட விருக்கிறது.
அது குறித்த அறிவிப்பை அம்மாநில முதல்வர் ஹிமாந்த பிஸ்வா ஷர்மா வெளியிட்டுள்ளார். கவுகாத்தியில் நடைபெற்ற 100ஆவது சட்டசபை கூட்டத்தில் இத்தகவலை அவர் வெளியிட்டார்.
பென்சன் தொகை உயர்வு மட்டுமல்லாமல், பல்வேறு மக்கள் நலத்திட்ட உதவிகள் குறித்தும் இந்த நிகழ்ச்சியில் முதல்வர் வெளியிட்டார்.
Thanks for Your Comments