எய்ட்ஸ் எனக்கூறி திருடனிடம் இருந்து தப்பிய பெண்... நடந்தது என்ன?

0

மும்பை போரிவலி என்ற இடத்தில் அடுக்கு மாடி கட்டிடத்தின் கீழ் தளத்தில் வசந்தா (53) என்ற பெண் தனியாக வசித்து வருகிறார். அவர் எலக்ட்ரானிக்ஸ் கடை ஒன்றில் வேலை செய்கிறார். 

எய்ட்ஸ் எனக்கூறி திருடனிடம் இருந்து தப்பிய பெண்... நடந்தது என்ன?
அவர் இரவில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது திடீரென நள்ளிரவில் ஏதோ சத்தம் கேட்டது. உடனே எழுந்து பார்த்த போது ஒருவன் முகத்தில் துணிக் கட்டிக் கொண்டு நின்றான். 

அவனிடம் யார் நீ என்று கேட்டதற்கு, தான் ஒரு போதைப் பொருள் ஆசாமி என்றும், திருடுவதற்காக வந்திருப்பதாக தெரிவித்தான். மேலும் திருடன் பெண்ணை தாக்க பாய்ந்தான்.

திருடன் தன்னை கொலை செய்து விடுவான் என்று கருதியும், திருட்டை தடுக்கும் நோக்கில், தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக தெரிவித்தார். 

அதோடு தனது உடலில் காயத்தை ஏற்படுத்திக் கொண்டு, ரத்தத்தை எடுத்து அத்திருடன் மீது வீசினார். உடனே கோபத்தில் கத்தினார்.

திருடன் தனக்கு எய்ட்ஸ் வந்து விடக்கூடாது என்ற பயத்தில் வீட்டின் முன் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்து கதவை வெளியில் பூட்டி விட்டு தப்பித்து ஓடிவிட்டான். 

பின்னர் அப்பெண் சத்தம் போட்டு பக்கத்து வீட்டுக் காரர்களை உதவி அழைத்து அவர்களிடம் நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தார். இதையடுத்து இது குறித்து போலீஸிலும் புகார் செய்யப்பட்டது.

போலீஸாரிடம் அப்பெண் தன்னை பாதுகாத்துக் கொள்ள தனக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாக திருடனிடம் பொய் சொன்னதாக தெரிவித்ததார். 

அப்பெண் வசித்த கட்டிடத்தில் வாட்ச்மென் கிடையாது. அதோடு கண்காணிப்பு கேமராவும் பொருத்தப்பட வில்லை. இதனால் திருடன் யார் என்று கண்டுபிடிப்பதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings