ஐ.டி ஊழியரை மிரட்டி கோடிகணக்கில் சுருட்டிய இளம் பெண்.. நிர்வாண வீடியோ கால் !

0

இந்த டிஜிட்டல் யுகத்தில் பணத்தை திருடவும், தகவல்களை திருடவும் சைபர் குற்றவாளிகள் பல்வேறு உத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். 

ஐ.டி ஊழியரை மிரட்டி கோடிகணக்கில் சுருட்டிய இளம் பெண்.. நிர்வாண வீடியோ கால் !
அந்த வகையில், தற்போது நிர்வாண வீடியோ கால், சைபர் குற்றவாளிகளின் முக்கிய உத்தியாக மாறி வருகிறது. மக்களை அச்சுறுத்துவதற்காக மார்பிங் செய்யப்பட்ட படங்களை சைபர் குற்றவாளிகள் பயன்படுத்துகின்றனர். 

நிர்வாண வீடியோ கால் அழைப்பு மூலம் தொழில்நுட்பத்துறை ஊழியரை மிரட்டி ரூ. 1.14 கோடி சுருட்டிய இளம்பெண் கைது செய்யப் பட்டுள்ளார். 

அதிகமாக கோபப்பட்டால் இதெல்லாம் நடக்கும் !

பெங்களூரு கே.ஆர். புரத்தை சேர்ந்த 41 வயது தகவல் தொழில் நுட்பத்துறை ஊழியர் ஒருவர் பிரிட்டனில் வேலை பார்த்து வருகிறார். அவர் பயிற்சிக்காகவும், திருமணம் முடிப்பதற்காகவும் பெங்களூருக்கு வந்தார்.

திருமணத்திற்கு பெண் தேடுவதற்காக அவரது பெயரை பிரபல மேட்ரிமோனியல் இணைய தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் இவரது சுய விபர குறிப்புகள் பலரால் பார்க்கப்பட்டன. 

இந்த சூழலில் இளம் பெண் ஒருவர் அவருடன் தொடர்பை ஏற்படுத்தி போன் நம்பரையும் கொடுத்துள்ளார். இதன் பின்னர் இருவரும் போனின் மூலம் நெருங்கி பழகியுள்ளனர். 

கடந்த ஜூலை 2 ஆம் தேதி, தனது தந்தை உயிரிழந்த விட்டதாகவும், எமர்ஜென்சிக்காக தனது தாயாருக்கு ரூ. 1500 வேண்டும் என்று கேட்டுள்ளார். 

இந்த உதவிய தொழில் நுட்ப பணியாளர் நிறைவேற்றிக் கொடுக்க, ஜூலை 4 ஆம் தேதி வீடியோ காலில் இளம்பெண் வந்துள்ளார். 

அப்போது, அந்த நபருக்கே தெரியாமல் இந்த இளம்பெண் நிர்வாண முறையில் வீடியோவில் உரையாடியதை வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.

போன் பழக்கத்தின் போது தொழில்நுட்ப ஊழியரின் பலவீனம் அனைத்தையும் இளம் பெண் தெரிந்து வைத்து விட்டதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில், நிர்வாணமாக தன்னுடன் வீடியோ காலில் பேசியதை  அந்த நபரின் பெற்றோரிடம் சொல்லி விடுவதாக இளம் பெண் மிரட்டியுள்ளார். 

இதையடுத்து இந்த விவகாரத்தில் இருந்து தப்பிப்பதற்காக அந்த நபர் ரூ. 1.14 கோடியை அந்த பெண் சொன்ன 4 வங்கி கணக்கில் செலுத்தி யுள்ளார். இதன் பின்னரும், அந்த பெண் தனது மிரட்டலை தொடர்ந்துள்ளார்.

(getCard) #type=(post) #title=(You might Like)

வேறு வழியின்றி அந்த தகவல் தொழில்நுட்ப ஊழியர் போலீசின் உதவியை நாட, அவர்கள் விசாரணையை துவக்கி யுள்ளனர். நீண்ட முயற்சிக்கு பின்னர் மோசடி செய்த பெண் கைது செய்யப் பட்டுள்ளார். 

அவரிடமிருந்து ரூ. 84 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஐ.டி ஊழியரை மிரட்டி கோடிகணக்கில் சுருட்டிய இளம் பெண்.. நிர்வாண வீடியோ கால் !

நேரடி அறிமுகம் இல்லாத நபர்களுடன் வீடியோ கால் தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். இன்று அதிக அளவில் இது போன்ற வழக்குகள் பதிவாகி வருகின்றன. 

வெளியே சொன்னால் அவமானம் என்று கருதி பலர் இதை புகாரளிப்ப தில்லை.. எனவே இன்னும் பல வழக்குகள் பதிவாகாமல் உள்ளன. சைபர் 

அமைதியான இதயம் ஆபத்தான அறிகுறி !

குற்றங்களில் சிக்காமல் மக்கள் எப்படி தற்காத்து கொள்ள தெரியாத அழைப்புகள், வீடியோ அழைப்புகள் மற்றும் அடையாளம் தெரியாத மின்னஞ்சல்களுக்கு பதிலளிக்காமல் இருப்பதே மோசடிக்கு ஆளாகாமல் இருக்க ஒரே வழி....

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings