உலகிலேயே முதன் முறையாக மனித மூளையில் உயிருடன் நெளிந்து கொண்டிருந்த புழு கண்டறியப்பட்டு அகற்றப் பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து, வறட்டு இருமலும் இரவு நேரங்களில் கடுமையான வியர்வையுமாக, வித்தியாசமான அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.
(getCard) #type=(post) #title=(You might Like)
மருத்துவர்கள் ஒவ்வொரு பிரச்சினையாக ஆராய்ந்து கொண்டே வர, 2022இல் கூடுதலாக அவருக்கு மறதியும் மன அழுத்தமும் ஏற்படவே, அவரது மூளையை ஒரு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்த்து விடலாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
ஸ்கேன் முடிவில் அந்தப் பெண்மணியின் மூளையின் முன் பகுதியில் ஏதோ காயம் ஏற்பட்டுள்ளதைக் காண்பிக்க, அறுவை சிகிச்சை செய்வது என முடிவு செய்யப் பட்டுள்ளது.
அறுவை சிகிச்சையின் போது, சிவப்பு நிறத்தில் ஏதோ நூல் போல இருப்பதை மருத்துவர்கள் கவனிக்க, அது சட்டென அசைந்துள்ளது.
தொடர் சிகிச்சையின் மருத்துவ ஆய்வில் அவருடைய மூளையில் ஓபிடாஸ்காரிஸ் ராபர்ட்ஸி என்ற ஒரு வகையான புழு ஒன்று உயிருடன் நெளிந்து கொண்டிருப்பது தெரிய வந்தது.
8 செ.மி நீளமுடைய அந்த புழுவை மருத்துவர்கள் அகற்றி யுள்ளார்கள். அந்த புழு குறித்து ஆராய்ந்த மருத்துவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. அந்த புழு, மலைப் பாம்புகளின் குடலில் மட்டுமே காணப்படும் அரிய வகை என்பது தெரிய வந்ததே காரணம்.
மலைப் பாம்புகளில் கழிவுகள் ஏதோ ஒரு வகையில் அந்த பெண்ணின் உடலுக்குள் சென்றதன் காரணமாகவே இந்த புழு அவரது உடலுக்குள் சென்றிருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
பெண்கள் அந்தரங்க தகவலை யாரிடம் பகிர்ந்து கொள்கிறார்கள் தெரியுமா?
மருத்துவ வரலாற்றில் மனித மூளையில் புழு கண்டுப் பிடிக்கப்படுவது இதுவே முதல் முறை என மருத்துவர்கள் கூறுகிறனர். மேலும், இது போன்ற தொற்றுக்கள் எதிர் காலத்திலும் நிகழலாம் என மருத்துவர்கள் கருதுகிறார்கள்.
Thanks for Your Comments