அக்டோபர் 1 முதல் பொருளாதார மாற்றங்கள்.. அவசியம் படிங்க !

0

ஒவ்வொரு மாதம் தொடங்கும் போதும் பொருளாதார ரீதியாக பல மாற்றங்கள் அமலுக்கு வருவது வழக்கம். அதன்படி அக்டோபர் 1 முதல் 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது.

அக்டோபர் 1 முதல் பொருளாதார மாற்றங்கள்..  அவசியம் படிங்க !
செப்டம்பர் 30ஆம் தேதிக்கு முன்பு வங்கியில் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். அக்டோபர் 1ஆம் தேதி முதல் உங்களது 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் மூலம் மாற்ற முடியாது.

சமையல் எரிவாயு சிலிண்டரை பொறுத்தவரை எல்பிஜி தவிர, சி என் ஜி மற்றும் பி என் ஜி விலைகளை எண்ணெய் நிறுவனங்களால் ஒவ்வொரு மாதமும் ஒன்னாம் தேதி மாற்றி அமைக்கப் படுகிறது. 

அதன்படி அக்டோபர் 1 சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. அக்டோபர் மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது. 

கப்ஸா ரெசிபி தயாரிப்பது - அரபி சாப்பாடு செய்முறை !

இந்த விடுமுறைகள் உங்களின் வங்கி செயல்பாடுகளை பாதிக்கலாம். அனைத்து நகரங்களிலும் உள்ள வங்கிகள் பொது விடுமுறை நாட்களில் மூடப்படும் எனவும் 

இதனைத் தவிர மாநிலங்களை பொறுத்து சில உள்ளூர் விடுமுறைகள் மாறுபடலாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் சிறுசேமிப்பு திட்டங்களுக்கு ஆதார் கட்டாயமாகும். 

உங்களது பி பி எஃப் மற்றும் தபால் அலுவலக சேமிப்பு திட்டம் மற்றும் செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகியவற்றை ஆதாருடன் இணைக்க வேண்டும். அவ்வாறு செய்யா விட்டால் அக்டோபர் 1 முதல் கணக்கு முடக்கப்படும். 

உங்கள் கணக்கில் இருந்து எந்த விதமான பரிவர்த்தனை களையும் டெபாசிட்களையும் செய்ய முடியாது. எனவே சரியான நேரத்தில் ஆதார் இணைப்பது நல்லது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings