சொன்னா நம்ப மாட்டீங்க... ஏழை முதியவரின் பங்கு மதிப்பு ரூ. 100 கோடி !

0

பங்குச் சந்தையில் முதலீடு செய்வது என்பது அதில் போதிய அறிவு இருந்தால் மட்டுமே சாதிக்க முடியும். இல்லை யென்றால் எப்படி பட்டவர்களையும் கவிழ்த்து விடும்.

சொன்னா நம்ப மாட்டீங்க... ஏழை முதியவரின் பங்கு மதிப்பு ரூ. 100 கோடி !
கர்நாடகாவில் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நூறு கோடி ரூபாய்க்கு பங்குகளை வைத்து இருப்பது குறித்து ராஜீவ் மேத்தா X (எக்ஸ்) தளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.

அவரது பதிவில், எல் அண்டு டி நிறுவனத்தில் ரூ. 80 கோடி அளவிற்கும், அல்ட்ராடெக் சிமெண்டில் ரூ. 21 கோடிக்கும், கர்நாடகா வங்கியில் ரூ. 1 கோடிக்கும் பங்குகளை வைத்து இருக்கிறார் 

இந்த முதியவர். ஆனாலும், எளிமையான வாழ்க்கை வாழ்கிறார் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் முதியவர் பேசும் வீடியோவையும் ராஜீவ் மேத்தா பதிவு செய்து இருக்கிறார். 

அந்த வீடியோவில், ஆண்டுக்கு எனக்கு ஆறு லட்சம் ரூபாய் அளவிற்கு டிவிடன்ஸ் கிடைக்கிறது என்று அந்த முதியவர் கூறுகிறார். இதைத் தொடர்ந்து நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 

நம் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க !

ஒருவர் தனது பதிவில், எந்தவித பதற்றமும் இல்லாமல் பங்குகளையும் விற்காமல், எளிமையாக இருப்பதுவும் ஒரு அதிகாரம் தான் என்று பதிவிட்டுள்ளார். 

மற்றொருவர் தனது பதிவில், எளிமையான மனிதர் நல்ல பங்குகளை வைத்து இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். சிலரோ பணத்தை பயன்படுத்தாமல் சொத்தாக சேர்த்து வைத்து என்ன பயன்? எதையும் அனுபவிக்க வில்லை. 

பணம் என்பது எரிபொருள் போன்றது. டேங்கில் வைத்திருந்து அதை பயன்படுத்த வில்லை என்றால் என்ன பயன் என்று பலவாறு கேள்விகளை எழுப்பி உள்ளனர். 

ஆனாலும், பங்குச் சந்தையில் இந்தளவிற்கு பங்குகளை வைத்திருக்கும் இவரை பெரும்பாலும் பாராட்டவே செய்கின்றனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings