1919 ஏப்ரல் 13ஆம் தேதியன்று அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலாபாகில் நடந்த கொடுமையான சம்பவத்தில் நூற்றுக் கணக்கான இந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
அப்போது அவர் எதிரே நின்றவர் ஜெனெரல் டயர். 1200 சீக்கியர்களை சுட்டுக் கொன்றவர் பொற்கோயிலில் வந்து நின்றால் எப்படி இருக்கும்?
என்ன வேண்டும்? மதகுரு கேட்டார். நான் சீக்கிய மதத்துக்கு மாறவேண்டும். என்றார் டயர். அந்த வேண்டுகோளை பூசாரியால் மறுக்கமுடியாது. சடங்கை நிறைவேற்ற முனைந்தார்.
பால் பொருட்களில் உள்ள அபாயம் தெரியுமா?
இரு நிபந்தனைகள் என்று கூறிய டயர். என்னால் டர்பன் வைத்துக் கொள்ள முடியாது. புகை பிடிப்பதை நிறுத்த மாட்டேன் என கூறினார். மதம் மாற அவை அவசியமில்லை.
மாறிய பின் உங்கள் விருப்பம் என்று கூறி சடங்கை நிறைவேற்றினார் மதகுரு. அதன் பிறகு டயர் சீக்கியர் ஆனார் ஆனால் மனம் மாறி விட்டாரா? திருந்தி விட்டாரா? என்றால் அப்படி எதுவும் இல்லை.
ஆனால் அவனுக்கு ஆதரவு ப்ரிட்டிஷ் தரப்பில் கூடுதலா இருந்தது. விசாரணை முடிவில் அவன் வேலையை இழந்தாலும் இன்றைய மதிப்பில் பத்து கோடி ரூபாய் அவனுக்கு நன்கொடையாக திரட்டபட்டது.
ஆனால் அதை அனுபவிக்கும் நிலையில் அவன் இல்லை. இதயநோய் வந்து படுத்திருந்தான். மரணப் படுக்கையில் நான் செய்தது சிலர் தவறு என்கிறார்கள். சிலர் சரி என்கிறார்கள்.
இறப்புக்கு பின் ஆண்டவனை கேட்டு தெரிந்து கொள்வேன் என சொல்லி விட்டு உயிர்நீத்தான். இன்றுவரை பல ப்ரிட்டிஷ் பிரதமர்கள் ஜாலியன்வாலா பாக் வந்துள்ளனர். ப்ரிட்டிஷ் அரசி கூட வந்து அஞ்சலி செலுத்தி யுள்ளார்.
1997ல் வந்த ப்ரிட்டிஷ் ராணியின் கணவர் ஜாலியன் வாலா பாக்கில் மரணமடைந்த வர்களின் எண்ணிக்கையை இந்தியர்கள் மிகைப்படுத்தி சொல்கிறார்கள் என சொல்லி சர்ச்சையில் சிக்கினார்.
புளியம் பழத்தில் இருக்கும் மருத்துவ பயன்கள் என்ன?
ஜெனெரல் டயரின் உடல் புதைக்கபடவில்லை. எரிக்கபட்டது. அவனது சந்ததியினர் அவனுக்கு சமாதியோ, கல்லறையோ கட்ட மறுத்து விட்டார்கள்.
அவனது கொள்ளுபேரன், பேத்தி பலமுறை ஜாலியன் வாலாபாக் வந்து மன்னிப்பு கேட்டு விட்டு போயுள்ளனர். ஆனால் ப்ரிட்டிஷ் அரசு தான் இன்னும் திருந்தவில்லை.
Thanks for Your Comments