இளமையாக இருக்க 111 மாத்திரைகளை உட்க்கொள்ளும் கோடீஸ்வரர் !

0

பெரும் பணக்காரர் பிரையன் ஜான்சன் வருடத்திற்கு 2 மில்லியன் டாலரை செலவழித்து, இளமையாக வைத்துக் கொள்ள தினமும் 111 மாத்திரைகளை உட்கொள்வதாக பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இளமையாக இருக்க 111 மாத்திரைகளை உட்க்கொள்ளும் கோடீஸ்வரர் !
தனது உடல் முன்னேற்றத்தைக் கண்காணிக்க பல்வேறு சுகாதார கண்காணிப்பு சாதனங்களையும் பயன்படுத்துகிறார் பிரையன். பேஸ்பால் தொப்பியை அணிந்துள்ளார். 

அது அவரது உச்சந்தலையில் சிவப்பு ஒளியை வீசி, பல மாதிரிகளை சேகரிக்கிறது. பிரையனின் இரவுநேர விறைப்புத் தன்மையை கண்காணிக்க அவரது ஆணுறுப்பில் ஒரு சிறிய ஜெட் பேக் இணைக்கப் பட்டுள்ளது.

ஜான்சன் தனது முழு உடலையும் ஆண்டி ஏஜிங் அல்காரிதத்திற்கு மாற்ற விரும்புகிறார். 46 வயதான அவர் தனது உறுப்புகளை 18 வயதுடைய உறுப்புகளைப் போல் வைத்துக் கொள்வதை குறிக்கோளாக வைத்துள்ளார். 

இந்த டெக்னாலஜி கோடீஸ்வரர் காலை 11 மணிக்கே இரவு உணவை சாப்பிட்டு விடுகிறார். 30 வயதில் ஜான்சன் இருக்கும் போது தனது பணம் செலுத்தும் நிறுவனமான Braaintree Payment Solution-ஐ EBay-க்கு 800 மில்லியன் டாலர் பணத்திற்கு விற்று செல்வந்தர் ஆனார். 

அவரின் தலைமை மார்க்கெட்டிங் அதிகாரி கேட் டோலோவும் இந்த புளூபிரிண்ட் வாழ்க்கை முறையை ஏற்றுக் கொண்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் தெருக்களில் மணிக்கு 16 மைல் வேகத்தில் அதாவது மிகவும் மெதுவாக தனது எலெக்ட்ரிக் ஆடி காரை ஓட்டுகிறார். 

அதற்கு முன்பு ஓட்டுதல் என்பது நாம் செய்யும் மிகவும் ஆபத்தான காரியம் என்ற மந்திரத்தை தனக்கு தானே சொல்லிக் கொள்வதாக ஊடகம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

ஜான்சன் தனது டீனேஜ் மகனுடன் ரத்தத்தை மாற்றிக் கொண்டார். ஒரு நாளைக்கு 100-க்கும் மேற்பட்ட சப்ளிமெண்ட்ஸ் எடுத்துக் கொள்கிறார். மேலும் 30 மருத்துவர்கள் கொண்ட குழுவால் தினசரி உடல் கொழுப்பு ஸ்கேன் மற்றும் வழக்கமான MRI-களுக்கு உட்படுத்தப் படுகிறார். 

நம்பிக்கைக்குரிய ஐஏஎஸ்.. யார் இந்த பீலா ராஜேஷ்?

கொலாஜன், ஸ்பெர்மிடின் மற்றும் கிரியேட்டின் போன்ற பொருட்கள் நிரம்பிய கிரீன் ஜெயண்ட் ஸ்மூத்தியுடன் அவர் தனது ஒவ்வொரு நாளையும் தொடங்குகிறார் என்றும் ஊடகங்களில் வெளியாகி யுள்ளது. தவிர இவரின் சொத்து மதிப்பு 400 மில்லியன் டாலர் எனக் கூறப்படுகிறது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings