2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இரண்டு நாள்களில் தொடங்க வுள்ளது. 2024 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி (திங்கள்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
பொங்கல் பண்டிகைக்கு வெளியூரில் வேலை செய்வோர் சொந்த ஊர்களுக்குச் செல்வதுண்டு. இதற்காக சிறப்புப் போக்குவரத்து வசதிகளும் செய்யப்படும்.
இதில், ரயில் பயணத்திற்கு 120 நாள்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். இந்நிலையில், பொங்கல் பண்டிகைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கப்பட உள்ளது.
ஜனவரி 11 ஆம் தேதி (வியாழக்கிழமை) ரயிலில் பயணிக்க செப். 13 ஆம் தேதி (வருகிற புதன்கிழமை) முன்பதிவு தொடங்குகிறது.
பேமிலியில் இருந்து ஒருவரின் ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்வது எப்படி?
ஜனவரி 12 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) பயணிக்க செப். 14 ஆம் தேதியும், ஜனவரி 13 ஆம் தேதி (சனிக்கிழமை) பயணிக்க செப். 15 ஆம் தேதியும்
ரயில் டிக்கெட் முன்பதிவு காலை 8 மணிக்குத் தொடங்கும். ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ அல்லது டிக்கெட் கவுன்டர்களிலோ முன்பதிவு செய்யலாம்.
Thanks for Your Comments