செப்டம்பர் 14, 1923ல் சிந் மாகாணத்தில் பிறந்தார் ராம் ஜெத்மலானி. இவரது பெற்றோர் பூல்ச்சந்த் ஜெத்மலானி மற்றும் பர்பதி பூல்ச்சந். பள்ளி படிப்பின் போதே டபிள் ப்ரமோஷன் பெற்ற புத்திசாலி மாணவர் ராம் ஜெத்மலானி.
அப்போது, வக்கீல் ஆகவேண்டும் என்றால் குறைந்த பட்சம் 21 வயது பூர்த்தி ஆகியிருக்க வேண்டும். ஆனால், ராம் ஜெத்மலானி, சிறப்பு விதிவிலக்கு பிட்டெரு 18 வயதில் வழக்கறிஞராக தனது பணியை துவங்கினார்.
இன்சுலின் செடியின் மருத்துவ குணங்கள் தெரியுமா?
ராம் ஜெத்மலானி 18 வயதில் துர்கா எனும் பெண்ணை இந்திய பாரம்பரிய முறையில் திருமணம் செய்து கொண்டார்.
பின்னர், 1947ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு முன்னர் ரத்னா ஷஹானி எனும் பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ரத்னாவும் ராம் ஜெத்மலானி போல ஒரு வழக்கறிஞர் ஆவார்.
ராம் ஜெத்மலானி-க்கு இரு மனைவிகள் மூலம் 4 குழந்தைகள். ராணி, ஷோபா, மகேஷ் - முதல் மனைவி துர்கா-விற்கு பிறந்தவர்கள். ஜானக் என்பவர் ரத்னா-விற்கு பிறந்த குழந்தை.
ராம் ஜெத்மலானியின் 4 குழந்தைகளில், மகேஷ் மற்றும் ராணி உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினர். இதில், மகேஷ் பாரதிய ஜனதா கட்சியில் பதவி வகித்திருந்தார். மற்றும் ராணி ஒரு சமூக ஆர்வலராக விளங்கினார்.
2016 - 2019 வரை (இறக்கும் வரை) இவர் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தார். நாட்டின் புகழ்பெற்ற வழக்கறிஞரான இவர், ஒரு நாள் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு ரூ.25 லட்சம் வரை கட்டணம் பெற்று வந்ததாக அறியப் படுகிறது.
சுவையான பன்னீர் கட்லெட் சாண்ட்விச் செய்வது எப்படி?
இவரது சொத்து மதிப்பு ரூ.64 கோடிகளுக்கு மேல் என கூறப்படுகிறது. ராம் ஜெத்மலானி-க்கு குற்றவியல் வழக்குகள் மற்றும் ஹை-ப்ரோபைல் சிவில் வழக்குகளில் வாதாடுவதில் விருப்பம் அதிகமாக இருந்தது.
இந்தியாவில் சர்ச்சைக் குள்ளான மற்றும் பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்திய பல வழக்குகளில் ராம் ஜெத்மலானி வாதாடியுள்ளார்.
பெரும்பாலும் குற்றம் சாட்டப் பட்டவர்களுக் காகவே இவர் வாதாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராம் ஜெத்மலானி வாதாடிய டாப் 10 வழக்குகள்:
சத்வந் சிங் - கேஹர் சிங் - இந்திரா காந்தி படுகொலை வழக்கு
ராஜிவ் காந்தி படுகொலை வழக்கு
ஹர்ஷத் மேத்தா - ஸ்டாக் மார்க்கெட் முறைகேடு வழக்கு.
நிழலுலக தாதா ஹஜி மஸ்தான்-ன் கொள்ளை வழக்கு களுக்காக வாதாடினார்.
எல்.கே. அத்வானி மீது சுமத்தப்பட்ட ஹவாலா மோசடி வழக்கு (தான் வாதாடியதால் தான் அத்வானி வென்றார் என ராம் ஜெத்மலானி கூறி இருந்தார்)
ஜோத்பூர் ஆஷ்ரமத்தில் 16 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த 72 வயதுமிக்க சாமியாருக்காக வாதாடினார். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்காக சொத்து குவிப்பு வழக்கு வாதாடினார்.
முன்னாள் கர்நாடக முதல்வர் எடியூரப்பாவிற்கு ஆதரவாக சட்ட விரோதமாக தோண்டப்பட்ட சுரங்கங்கள் வழக்கில் வாதாடினார்.
சுவையான மட்டன் கொத்துக்கறி அடை செய்வது எப்படி?
ராம் ஜெத்மலானியின் மரணம்:
கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 8ம் தேதி, புது டெல்லியில் தனது இல்லத்தில் வயது மூப்பு மற்றும் உடல்நல குறைபாடு காரணத்தால் மரணம் அடைந்தார்.
இறப்பதற்கு முன், சில மாதங்களாகவே ராம் ஜெத்மலானி உடல்நலம் குன்றி இருந்தார் என இவரது மகன் மகேஷ், பத்திரிகை யாளர்களிடம் கூறி இருந்தார்.
Thanks for Your Comments