ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா... 4000 ஆடுகள் !

0

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள கோட்டை கருப்பண்ணசாமி கோயிலுக்கு பக்தர் ஒருவர் 60 ஆடுகளை நேர்த்தியாக செலுத்தியது பரவசத்தை ஏற்படுதியது.

ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா... 4000 ஆடுகள் !
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது ப.விராலிப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் பழமையான கோட்டை கருப்பண்ணசாமி கோயில் அமைந்துள்ளது. 

இந்த கோயிலில் ஆடித் திருவிழா சாட்டுதலுடன் தொடங்கி யுள்ளது. வரும் 18ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு நடைபெறும் திருவிழாவின் முக்கிய நிகழ்வன்று ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் பாரம்பரிய நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாவின் போது கோட்டை கருப்பண்ண சாமிக்கு நேர்த்தியாக ஏராளமான பக்தர்கள் ஆடுகளை வழங்குவது வழக்கம். 

சிக்கனில் அசத்தலான வடை செய்வது எப்படி?

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான திருவிழாவினை முன்னிட்டு எழுவனம்பட்டி கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் மட்டும் 60 ஆடுகளை நேர்த்தியாக செலுத்தினார். 

இதற்கென மினி லாரியில் ஏற்றி வரப்பட்ட ஆடுகளை கோயில் நிர்வாகிகளிடம் வழங்கி சாமி தரிசனம் செய்தார்.

இது போன்று பக்தர்களின் நேர்த்தியாக இதுவரை 900 ஆடுகள் கோட்டை கருப்பண்ணசாமி கோயிலுக்கு வழங்கப் பட்டுள்ளதாகவும், 

இந்த ஆண்டு மட்டும் இது போன்று சுமார் 4 ஆயிரம் ஆடுகள் நேர்த்தியாக செலுத்தபடக் கூடும் என எதிர் பார்ப்பதாகவும் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings