ஜவான் படம் வசூல் ஆறு நாட்களில் ரூ. 600 கோடி !

0

கோலிவுட்டில் தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்த அட்லி தற்போது பாலிவுட்டில் தன் முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்து விட்டார். 

ஜவான் படம் வசூல் ஆறு நாட்களில் ரூ. 600 கோடி !
ஜவான் படம் செய்து வரும் வசூல் வேட்டையை பார்த்து பாலிவுட் ஹீரோக்களுக்கு அட்லி இயக்கத்தில் நடிக்கும் ஆசை ஏற்பட்டிருக்கிறது. அதனால் அட்லி இனி பாலிவுட்டில் பிசியாகி விடுவார் என நம்பலாம்.

அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோர் நடித்த ஜவான் படம் செப்டம்பர் 7ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. 

கொழுப்பு ஆண்கள் கவனமாக இருக்க வேண்டும்.... தெரிந்து கொள்ளுங்கள் !

படம் ரிலீஸான அன்றே இந்தியாவில் மட்டும் ரூ. 75 கோடி வசூல் செய்தது. இந்நிலையில் தியேட்டருக்கு வந்த ஆறே நாட்களில் உலக அளவில் புது சாதனை படைத்திருக்கிறது ஜவான்.

ஜவான் படம் வெளிவந்த வெறும் ஆறு நாட்களில் உலக அளவில் ரூ. 600 கோடி வசூல் செய்துள்ளது. மேலும் இந்தியாவில் ரூ.350 கோடியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. 

ஜவான் படம் திரைக்கு வந்த முதல் நாளில் உலக அளவில் ரூ. 129.06 கோடி வசூல் செய்தது. ரிலீஸான அன்றே அதிகம் வசூல் செய்த இந்தி படம் என்கிற பெருமையை பெற்றிருக்கிறது ஜவான்.

வேலை நாளான நேற்று ஜவான் இந்தியாவில் ரூ. 26.50 கோடி வசூல் செய்திருக்கிறது. இதுவரை இந்தியாவில் ரூ. 345. 58 கோடி வசூலித்திருக்கிறது. 

வசூல் விபரங்களை பார்த்து அட்லியை நம்பி ஜவான் படத்தை தயாரித்த ஷாருக்கானும், அவரின் மனைவி கௌரியும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக ஷாருக்கான் நடிப்பில் வெளியான பதான் படம் ரூ. 1000 கோடி வசூல் செய்து பாலிவுட்டில் புது சாதனை படைத்தது. 

அந்த சாதனையை ஜவான் முறியடிக்குமா என பலரும் கேட்டு வந்தார்கள். பதானை ஜவான் கண்டிப்பாக முந்தும் என்பது தற்போது தெளிவாக தெரிந்துவிட்டது.

ஜவான் படம் இந்தி தவிர்த்து தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது. சென்னையில் இருக்கும் ரோஹினி தியேட்டரில் ஜவானுக்கு எஃப்.டி.எஃப்.எஸ். நடந்தது. 

கையை வைத்து விதைப்பையின் அளவைக் அறிய !

அந்த தியேட்டரில் எஃப்.டி.எஃப்.எஸ். பெற்ற தமிழ் அல்லாத படம் ஜவான் தான் என்பது குறிப்பிடத்தக்கது. ரோஹினி தியேட்டரில் தான் ஜவான் படத்தை பார்த்து மகிழ்ந்தார் அட்லி. அவருடன் மனைவி ப்ரியாவும், அனிருத்தும் இருந்தார்கள்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings