நெஞ்சு எரிச்சல், செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை போன்ற பல பிரச்சனைகளுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் 'டைஜீன்' ஜெல்லை திரும்பப் பெறுவதாக அப்போட் (Abbott) நிறுவனம் அறிவித்துள்ளது.
ஒரு சில வாடிக்கை யாளர்களின் புகார்களைத் தொடர்ந்து இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) விடுத்த எச்சரிக்கையால்,
முகப்பொலிவு பெற, வைட்டமின் E கேப்சூலை இப்படி பயன்படுத்துங்கள் !
செரிமானக் கோளாறுகளுக்கான ஆன்டாக்சிட் டைஜீன் ஜெல் மருந்தை அப்போட் மருந்து தயாரிப்பு நிறுவனம் தாமாக முன்வந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
பொதுமக்கள் அளித்த புகாரில், ஆகஸ்ட் மாதம் வாங்கப்பட்ட இந்த மருந்து வெள்ளை நிறத்தில் மாறிவிட்டதாகவும், சுவை கசப்பாக இருப்பதாகவும், மிகக் கடுமையான மணம் வீசுவதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.
வழக்கமாக அப்பாட் நிறுவனம் தயாரிக்கும் டைஜீன் ஜெல் இனிப்பு சுவையுடன் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும்.
நிறம் மற்றும் சுவை மாறியிருப்பதாக வந்த புகார்களால் கோவா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட செரிமானக் கோளாறு களுக்கான டைஜீன் ஜெல் என்ற மருந்தை,
அப்போட் நிறுவனம் திரும்பப் பெறுவதாகவும், இதனை நோயாளிகள் யாரேனும் எடுத்துக் கொண்டிருந்தால் அதனை நிறுத்தவும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
மேலும், இந்த மருந்தை எடுத்துக் கொண்டிருந்தால், அவர்கள் பயப்பட வேண்டாம் என்றும், ஒரு வேளை, மிக நீண்ட நாள்களுக்கு இந்த மருந்தை உட்கொண்டிருந்தால் மட்டும் அவர்கள் மருத்துவர்களை நாடலாம் என்றும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அதே வேளையில், டைஜீன் மாத்திரைகளை சாப்பிடுவது பாதுகாப்பானது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, னைத்து மாநில/யூனியன் பிரதேசங்களின் மொத்த மருந்துப்பொருள் விற்பனை யாளர்களுக்கு இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு ஆணையம் வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில்,
அப்போட் நிறுவனத்தின் கோவா தொழிற்சாலையில் உற்பத்தியான இந்த குறிப்பிட்ட மருந்தை விற்பனை யிலிருந்து நீக்குமாறும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
எந்த உணவுக்கு எந்த சைட் டிஷ் சாப்பிடலாம்?
மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் தங்கள் நோயாளிகளை இந்த மருந்தை பயன்படுத்துவதை நிறுத்தும் படியும்,
அந்த மருந்தை உட்கொள்வதால் ஏதேனும் பக்க விளைவுகள் ஏற்பட்டால் அதுகுறித்து உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் படியும் உத்தர விட்டுள்ளது.
அதனால் ஏற்படும் நேர்மறை சிக்கல்களை உடனுக்குடன் தெரிவிக்குமாறும் அறிவுறுத்தும்படி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
'டைஜீன்' ஜெல் குடித்து வரும் நபர்கள், தங்கள் பாட்டிலில் குறிப்பிடப் பட்டிருக்கும் தயாரிப்பு மையம் விவரத்தைப் பார்க்கவும்,
இஞ்சியை தினமும் உணவில் சேர்க்க இதுதான் காரணம்... தெரியுமா?
அதில் கோவாவில் உள்ள அப்போட் மருந்து தயாரிப்பு மையத்தில் தயாரானதாக இருந்தால், அந்த மருந்தை பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். ஜெல் நிறம், சுவை மாறியிருந்தால் அதைப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
Thanks for Your Comments