வாய்ப்புகள் கிடைக்கும் போது அதை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். அப்படித் தான் ஒருவர் தன்னுடைய திறமையையும் புதிய தொழில் நுட்பத்தையும் பயன்படுத்தி ஒரே மாதத்தில் கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு கருவியான சாட் ஜிபிடி-யை (ChatGPT) பயன்படுத்தி வெற்றிகரமான தொழில் முனைவோராக மாறியுள்ளார் லீமென்.
உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம்... விலை என்ன தெரியுமா?
அது மட்டுமா, செயற்கை நுண்ணறிவை எப்படி பயன்படுத்தலாம் என இன்று பல தொழில் முனைவோர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுத்து கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டி வருகிறார்.
ஆறு வருட காலமாக கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்தும், அதை வைத்தும் டிரேட் செய்தும் வந்துள்ளார் லீமென். அதற்காக இவர் FTX என்ற தளத்தை பயன்படுத்தி வந்திருக்கிறார்.
துரதிஷ்டவசமாக திடீரென்று ஒரு நாள் அவர் உபயோகித்த FTX தளம் வீழ்ச்சியடையவே, இதுவரை அதில் அவர் முதலீடு செய்த மொத்தப் பணமும் ஒரு நொடியில் காணாமல் போனது.
இதனால் அவருக்கு கடுமையான நஷ்டம் ஏற்பட்டதோடு, அதுவரை பணமழை கொட்டும் என நம்பிக் கொண்டிருந்த கிரிப்டோ நாணயங்களின் உண்மையான நிலவரம் புரிய ஆரம்பித்தது.
அடுத்த இரண்டே வாரங்களில் அவரது வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது. முதலில் அவருக்கு கிரிப்டோ நாணயங்கள் மீது அளவற்ற ஆர்வம் இருந்தது. சாட்ஜிபிடி-யை பார்த்த போது அவருக்கு இது தான் முதலில் தோன்றியது.
எடுத்துக் கொண்ட எந்த வொரு விஷயத்திலும் முழு ஈடுபாட்டோடு செய்வார் என்பதால், இனி எதிர்காலம் செயற்கை நுண்ணறிவை நம்பியே உள்ளது என உணர்ந்த லீமென், அது குறித்து மேலும் தெரிந்து கொள்ள ஆர்வமாகினார்.
இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து சாட் ஜிபிடி-யில் தீவிரமான பரிசோதனை செய்து வந்தார்.
சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்றால் என்ன?
அதே நேரத்தில், பார்வையாளர்களின் ஆர்வத்தை தெரிந்து கொள்வதற்காக, தன்னுடைய ட்விட்டர் கணக்கில் செயற்கை நுண்ணறிவு தொடர்பான கண்டண்ட்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார்.
தொடர்ந்து பயிற்சி செய்ததன் மூலம் சாட் ஜிபிடி-யில் அவரது திறன் மெருகேறியதோடு செயற்கை நுண்ணறிவு உள்ளடக்கத்திலும் நிபுணத்துவம் பெற்றார்.
உற்பத்தி திறனை அதிகரிக்க உதவியாக இருக்கும் செயற்கை நுண்ணறிவு கருவிகள் தொடர்பான ட்விட்டர் பதிவுகள் மற்றும் இவரது உள்ளடக்கங்கள் யாவும் மில்லியன் கணக்கில் பார்வைகளை பெற்றது.
தொடர்ந்து இவரை அதிகமானோர் பின்பற்ற தொடங்கினர். வெறும் 65 நாட்களில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஃபாலோயர்ஸ்களை பெற்றார். அதனை யடுத்து AI Solopreneurship என்ற நியூஸ்லெட்டரை தொடங்கினார்.
செயற்கை நுண்ணறிவின் நுட்பங்களை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பதை உணர்ந்த லீமென், AI Audience Accelerator என்ற பெயரில்,
செயற்கை நுண்ணறிவின் மூலம் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் கண்டண்ட் மார்கெட்டிங்கை எப்படி செய்யலாம் என தொழில் முனைவோர்களுக்கு வழிகாட்டும் ஆன்லைன் வகுப்பை எடுக்க முடிவு செய்தார்.
ஒரே மாதத்தில் பலரது எதிர்பார்ப்பையும் மீறி, இவரது வகுப்பில் 1,078 நபர்கள் சேர்ந்தனர்.
பெரும்பாலும் அமெரிக்கா, கனடா நாட்டைச் சேர்ந்த 20 முதல் 35 வயதிற்குட்பட்ட தொழில் முனைவோர்கள் கண்டன் கிரியேட்டர்ஸ், கிரிப்டோ ஆர்வலர்கள் ஆகியோர்களே இதில் அதிகமாக சேர்ந்தனர்.
இதன் மூலமாக மட்டுமே இவருக்கு கிடைத்துள்ள வருமானம் எவ்வுளவு தெரியுமா? இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.1.4 கோடியை ஒரே மாதத்தில் லீமென் சம்பாதித்துள்ளார்.
Thanks for Your Comments