திருச்சி மாவட்டம், மணப்பாறை அடுத்த அணியாப்பூரில், கோட்டை மாரியம்மன் கோவிலில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படும்.
இந்நிலையில் இந்த ஆண்டு திருவிழா அணியாப்பூர், வெள்ளாளபட்டி, தவளவீரன்பட்டி ஆகிய கிராம மக்களின் சார்பாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் கடந்த 3ம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் இரவு வரை நடைபெற்றது. பால்குடம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர்.
தொடர்ந்து பொங்கல் வைத்தும், கிடா வெட்டியும் பக்தர்கள் வழிபாடு நடத்தினர். பெண்கள் முளைப்பாரி எடுத்து கோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர்.
மரு எவ்வாறு உருவாகின்றன? சித்த மருத்துவம் சொல்வது என்ன?
பின்னர் மாலையில் பாடை வேஷம், படுகளம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் வண்ண பொடிகளைத் தூவினர்.
இந்த திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளியூரைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான பொதுமக்கள் கலந்துக் கொண்டனர். வித்தியாசமாக துடப்பத்தால் ஒருவரை ஒருவர் அடித்து நேர்த்திக்கடன் செய்த காட்சி வைரலாகி வருவது.
Thanks for Your Comments