ஆன்டிபயாடிக் மருந்துகள் மனிதர்களின் குடலை பாதிக்குமா?

0

பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகள் மனிதர்களின் வயிற்றிலும் காணப்படுகின்றன. அவை மனிதர்களின் வயிற்றிலும் வளர்கின்றன. அவற்றில் சில, மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். 

ஆன்டிபயாடிக் மருந்துகள் மனிதர்களின் குடலை பாதிக்குமா?
பாலில் இருந்து தயிர் தயாரிக்கும் செயல்முறைக்கு பாக்டீரியா உதவுவது இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நம் உடலில் கோடிக்கணக்கான பாக்டீரியாக்கள் உள்ளன. 

அவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது. அவற்றில் அதிக எண்ணிக்கை யினவை நமது குடலில் இருக்கின்றன. நமது குடலில் காணப்படும் பாக்டீரியாக்கள் நமது ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.

அவை சிறப்பான நோய் எதிர்ப்பு அமைப்பு மற்றும் செரிமான அமைப்பை பராமரிக்கவும் உதவுகின்றன. 

ஒருவரின் உடல்நிலை மோசமடைந்தால், ஆன்பயாடிக் மருந்துகளை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுகின்றனர் என்பது நமக்குத் தெரியும்.

ஆன்டிபயாடிக் மருந்துகள் கடந்த 80 ஆண்டுகளாக தொற்று நோய்களை வெற்றிகரமாக எதிர்த்து வருகின்றன. 

இதன் காரணமாக உலகம் முழுவதும் மக்கள் நோய்வாய்ப்படும் விகிதம் மற்றும் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இது மனிதர்களையும் விலங்குகளையும் வைரஸ், பாக்டீரியா போன்ற வற்றிலிருந்து பாதுகாக்கும் மருந்து. எனவே, ஆன்டிபயாடிக் மருந்துகள் நுண்ணுயிர்களை அழிப்பதால் அவை ஆண்டி மைக்ரோபியல் ஏஜெண்டுகள் என்று அழைக்கப் படுகின்றன.

ஆனால், அதிகளவிலான ஆன்டி பயாடிக் மருந்துகள் எடுத்துக் கொள்வதால், நம் உடலுக்கு நல்லதா என்ற கேள்வி எழாமல் இல்லை.

மனைவிகள் எதிர்பார்க்கும் விஷயம் !

நிபுணர்கள் சொல்வது என்ன?

ஆன்டிபயாடிக் மருந்துகள் மனிதர்களின் குடலை பாதிக்குமா?

ஆன்டி பயாடிக்குகள், குடல் நுண்ணுயிரிகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஒரு நபர் நோய் வாய்ப்பட்டால், மருத்துவர் அவருக்கு ஆன்டி பயாடிக்கை பரிந்துரைக்கிறார். 

ஆன்டிபயாடிக் எதிர்ப்பு நிலை காரணமாக அந்த ஒரு கோர்ஸ், உடலில் காணப்படும் நுண்ணுயிரிகளின் மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

மேலும் சுமார் ஒரு வருடத்திற்கு அவைகள் முற்றிலும் தாறுமாறாக செயல்படுகின்றன, என்று அமெரிக்கன் சொஸைட்டி ஃபார் மைக்ரோ பயாலஜியின் ஆம்பியோ ஜர்னலில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.

2000 இல் இருந்து 2015 வரையில் உலகளவில் ஆன்டிபயாடிக் பரிந்துரைகள் 65% அதிகரித்துள்ளதாக தேசிய அறிவியல் அகாடமிகளின் செயல்முறைகள் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரை தெரிவிக்கிறது. 

ஆன்டி பயாடிக்குகளை சார்ந்திருப்பதால் நமது ஆரோக்கியத்தின் மீது ஏற்படும் தாக்கம் குறித்து விஞ்ஞானிகள் கவலைப் படுகிறார்கள். ஆன்டி பயாடிக் உட்கொள்வதால் இரண்டு பெரிய சிக்கல்களை ஏற்படுத்துகிறது.

1 . இது நமது குடல் நுண்ணுயிரிகளை சேதப்படுத்துகிறது. 

2 . ஆண்டி பயாடிக் மீதான பாக்டீரியாவின் எதிர்ப்பு நிலை (antibiotic resistance) அதிகரித்து வருகிறது.

அமெரிக்காவில் ஆண்டி பயாடிக்குகள் மீதான எதிர்ப்பு நிலை அதிகரித்து வருவதால், மருத்துவ மனைகளில் சிகிச்சைகளில் பாதிப்பு ஏற்படுவதாக மெடிக்கல் நியூஸ் டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

குண்டான பெண்கள் ஆடையை தேர்வு செய்வது?

அமெரிக்காவில் இந்த மருந்துகள் மீதான எதிர்ப்பு நிலையின் அபாயங்களைக் கண்டறிந்து, அவற்றை மிக முக்கியமானவை, தீவிரமானவை அல்லது கவலைக்குரியவை என்று மூன்று வகைகளாக, நோய்க் கட்டுப்பாட்டு மையம் (CDC) பிரித்துள்ளது.

இதைத் தவிர ஆன்டிபயாடிக் பயன்பாட்டை கட்டுப்படுத்த சுகாதார ஊழியர்களிடம் வேண்டுகோள் விடுக்கப் பட்டுள்ளது.

ஆன்டி பயாடிக் மருந்துகளை தொடர்ந்து உட்கொள்வது உடலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துவதாக பல ஆய்வுகள் காட்டுகின்றன. 

குடல் பாக்டீரியா மீது இந்த மருந்துகள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன ?

ஆன்டிபயாடிக் மருந்துகள் மனிதர்களின் குடலை பாதிக்குமா?
வேறு வழி ஏதும் இல்லை என்ற நிலை வரும் போது மட்டுமே ஆன்டிபயாடிக் மருந்துகள் பயன்படுத்தப்பட வேண்டும், என்று ஓய்வு பெற்ற காஸ்ட்ரோ என்ட்ராலஜிஸ்ட் மருத்துவர் பி.கோஷ் கூறுகிறார்.

ஆன்டி பயாடிக்குகள் இல்லாமல் எங்களால் சிகிச்சையளிக்க முடியாது. அதில் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் அவற்றைப் பயன்படுத்தக் கூடாத பல சூழ்நிலைகளும் உள்ளன, என்று அவர் குறிப்பிட்டார்.

நாணயங்களில் புள்ளி நட்சத்திரக் குறியீடு ஏன்? அரிய தகவல் !

பல வகையான குடல் பாக்டீரியாக்கள் எந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் இருக்கிறதோ, அந்த அளவிற்கு அது உடலுக்கு நல்லது என்ற தகவலையும் அவர் அளித்தார்.

ஆன்டி பயாடிக்குகளின் ஒரு கோர்ஸ் கூட, அதன் மீதான எதிர்ப்பு நிலையை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது. குடலில் உள்ள குடல் நுண்ணுயிரிகளின் இருப்பை அது பாதிக்கும்.

இது மட்டுமின்றி ஆன்டி பயாடிக்குகள் தொற்றுநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்தப் படுகிறது. ஆனால், இந்த மருந்துகள் மற்ற நல்ல பாக்டீரியாக்களையும் தாக்குகிறது என்றார் அவர்.

உண்மையில் நுண்ணுயிர் எதிர்ப்பு ஆன்டி பயாடிக்குகள் குடலில் உள்ள எல்லா பாக்டீரியாக்களையும் பாதிக்கின்றன, என்று மருத்துவர் கோஷ் குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸில் உள்ள வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் ஆய்வக மற்றும் மரபணு மருத்துவப் பேராசிரியர் கௌதம் டான்தாஸ், 

ஒரு காட்டை உதாரணம் காட்டி, காட்டில் இருந்து ஒரு காய்ந்தபுல்லை அகற்ற கார்பெட் குண்டைப் பயன்படுத்துவது போன்றது இது.

இதில் நல்லது மற்றும் கெட்டது. என இரண்டுமே அழிக்கப் படுகின்றன. ஆண்டி பயாடிக்கும் அது போலவே செயல்படுகின்றன, என்று சுட்டிக் காட்டினார். 

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings