சென்னை, ஈசிஆர் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு சரியான ஏற்பாடுகள் செய்யப் படாததால் ரசிகர்கள் கடும் அவதிக் குள்ளாகினர். ஆயிரக் கணக்கான ரசிகர்கள் இசை நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் விரக்தியுடன் வெளியேறினர்.
ஒரே நேரத்தில் இரண்டு ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஏஆர் ரஹ்மான், உலகம் முழுவதும் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.
அந்த வரிசையில் சுமார் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
கடந்த (ஆக.12) மாதம் நடைபெறவிருந்த மறக்குமா நெஞ்சம் என்ற இந்த இசை நிகழ்ச்சி, கனமழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது.
பால் பொருட்களில் உள்ள அபாயம் தெரியுமா?
அதன்படி, ஞாயிற்றுக் கிழமையான கடந்த 10ம் தேதி சென்னை ஈசிஆர் பகுதியில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
இயக்குநர் மணிரத்னம் அவரது குடும்பத்தினர், நடிகர் அஜித்தின் குடும்பத்தினர் உட்பட ஏராளமான பிரபலங்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறவிருந்த நிகழ்ச்சிக்காக எடுத்திருந்த டிக்கெட்டுகள் செல்லும் என அறிவிக்கப் பட்டிருந்தது. அதனால் அதனை நம்பி ரசிகர்கள் சென்றுள்ளனர்.
ஆனால் அங்கே அளவுக்கு அதிகமான கூட்டம் இருந்ததால், நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு செல்ல முடியாமல் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் விரக்தியோடு வெளியேறினர்.
அப்படியும் உள்ளே சென்றவர்களுக்கு உட்கார எந்த விதமான இருக்கை வசதிகளும் இல்லை என சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் பார்க்கிங் வசதி இல்லாததால், ட்ராபிக் ஜாம் ஏற்பட்டது.
700க்கும் அதிகமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தும், வாகன நெரிசலை சமாளிக்க முடியாமல் ஈசிஆர் ஸ்தம்பித்தது. ஒருகட்டத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் வாகனமும் போக்குவரத்து நெரிசலில் சிக்கியது.
இந்த நிகழ்ச்சி கடும் சர்ச்சையான நிலையில், ஏஆர் ரஹ்மான் தானே எல்லா வற்றுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இதனிடையே இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல் துறையினர், நிகழ்ச்சியில் 25000 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது.
ஆனால், அங்கே 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் திரண்டதால் பாதுகாப்பு பணியில் சிரமம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளது.
மேலும், இசை நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த ஏசிடிசி நிறுவனம், கடந்த முறை பாதுகாப்புக்காக அனுபவம் வாய்ந்த குரூப் 4 செக்ரியூட்டிகளை நிறுவனம் பயன்படுத்தி யதாகவும்,
இந்த முறை அனுபவமில்லாத கல்லூரி மாணவர்களை தன்னார்வலர்களாக குறைந்த சம்பளத்தில் பணியில் அமர்த்தியுள்ளது தெரிய வந்துள்ளது. போதிய அனுபவம் இல்லாததால் குளறுபடி நிகழ்ந்து இருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
புளியம் பழத்தில் இருக்கும் மருத்துவ பயன்கள் என்ன?
அவர்களுக்கு போதுமான பயிற்சிகள் வழங்காமல் பணிகளில் அமர்த்தி இருப்பதும் குளறுபடிக்கு காரணமாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.
ஏ.ஆர் ரகுமானின் ரத்து செய்யப்பட்ட முந்தைய இசை நிகழ்ச்சிக்கு 24 ஆயிரம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று, முன்தினம் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், முந்தைய டிக்கெட் வைத்திருந்த பல்லாயிரக் கணக்கானோர் அதே டிக்கெட்டில் வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் விவிபி பாஸ், விஐபி பாஸ் என சுமார் 7 ஆயிரம் பாஸ்கள் வழங்கப் பட்டுள்ளதும் தெரிய வந்துள்ளது.
அதேபோல், 25 ஆயிரம் பேருக்கு மட்டுமே போலீஸாரிடம் அனுமதி வாங்கிய ஏசிடிசி நிறுவனம், 40000 டிக்கெட்டுகள் வரை விற்பனை செய்துள்ளது.
இதனால் போலீஸ் பாதுகாப்பில் குளறுபடிகள் ஏற்பட்டதுடன், இருக்கை வசதி இல்லாமலும் ரசிகர்கள் அவதிப் பட்டுள்ளனர்.
விசாரணைக்கு உரிய விளக்கங்களை அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு தாம்பரம் காவல் ஆணையரகம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளருக்கு உத்தர விட்டுள்ளது.
உலகின் மிக விலை உயர்ந்த ஐஸ்கிரீம்... விலை என்ன தெரியுமா?
சரியான எண்ணிக்கையிலான டிக்கெட்டுகளை விட, அதிக டிக்கெட்டுகள் விற்பனை செய்து ஏசிடிசி நிறுவனம் மோசடி செய்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது.
இந்த உண்மையை நிகழ்ச்சி ஏற்பாட்டளர்களே ஒப்புக் கொண்டதால், பிரச்சினை இன்னும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Thanks for Your Comments