உடல் எடை குறைந்தாலும் முகத்தில் உள்ள அதிகப் படியான கொழுப்பை குறைப்பது அவ்வளவு எளிதல்ல. எடை அதிகரிக்கும் பொழுது முகத்தில் கொழுப்புகள் தேங்கி விடுகின்றன. இதனால் எடை குறைந்தாலும் முகத்தில் உள்ள கொழுப்புகளை நீக்குவது சற்று கடினமாக இருக்கலாம்.
இது போன்ற கொழுப்புகளை நீக்க பல விதமான பயிற்சிகளும், யோகாசனங்களும் உள்ளன. இதைத் தாண்டி உணவுகளில் ஒரு சில மாற்றங்களை செய்வதன் மூலம் கொழுப்பை வேகமாக குறைக்க முடியும்.
முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் உங்களுடைய உணவு வழக்கத்தில் பின்வரும் மாற்றங்களை செய்து கொள்ளுங்கள்.
முகத்தில் கொழுப்புகளை அதிகரிக்கும் உணவுகளை இன்றே தவிர்த்திடுங்கள். இது குறித்த தகவல்களை ஊட்டச்சத்து நிபுணரான சௌமிதா அவர்களிடம் இருந்து தெரிந்து கொள்வோம்.
ரத்தம் குடிக்கும் வவ்வால்கள் தெரியுமா?
சோயா சாஸ் : .
சோயா சாஸில் அதிக அளவு சோடியம் மற்றும் உப்பு உள்ளது. இது முகத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும், மேலும் இதை அதிகமாக எடுத்துக் கொள்ளும் பொழுது உடலிலும் வீக்கம் ஏற்படலாம்.
இதில் குறைந்த அளவு கலோரிகள் இருந்தாலும், இது முகத்தில் வீக்கத்தை ஏற்படுத்தும் மற்றும் இரத்த அழுத்தத்தையும் அதிகரிக்கும்.
(nextPage)
ஜங்க் உணவுகள் : .
முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் ஜங்க் உணவுகளை தவிர்ப்பது நல்லது.
பிரட் : .
காலை உணவுக்கு பிரட் ரோஸ்ட் அல்லது சாண்ட்விச் செய்து சாப்பிடும் பழக்கம் இருந்தால், அதை உடனே மாற்றிக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
இது போன்ற அதிக கார்போ ஹைட்ரேட் உள்ள உணவுகளால் முகத்தில் அதிகப் படியான கொழுப்பு சேர்கிறது. போதுமானவரை பிரட் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் : .
சுத்திகரிக்கப்பட்ட உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, கோதுமை மற்றும் எண்ணெய் போன்ற உணவுகளை தவிர்க்கவும். இதனால் உடல் மற்றும் முகத்தில் கொழுப்பு சேரும்.
(nextPage)
சிவப்பு நிற இறைச்சி : .
ஒட்டகம் உணவை எப்படி சேமித்து வாழும் தெரியுமா?
அதிக உப்பு உள்ள உணவுகள் : .
உணவில் அதிகம் உப்பு சேர்ப்பதை தவிர்க்கவும். மேலும் உப்பு அதிகம் உள்ள சிப்ஸ் போன்ற ஸ்நாக்ஸ் வகைகளையும் முற்றிலும் தவிர்த்திடுங்கள்.
உங்களுடைய தினசரி உணவில் சரியான அளவு உப்பு சேர்ப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனெனில் அதிகப்படியான உப்பு ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கலாம்.
முகத்தில் உள்ள கொழுப்பை குறைய என்ன செய்யலாம்?
உங்களை நீரேற்றமாக வைத்துக்கொள்ள மற்றும் முகத்தில் உள்ள கொழுப்பை குறைக்க தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்துக் கொள்வதன் மூலம் அதிகப் படியான கலோரி உட்கொள்ளலை கட்டுப் படுத்துகிறது. இது வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி முகத்தில் ஏற்படும் வீக்கம் அல்லது நீர் கோர்த்தல் பிரச்சனையை குறைக்கிறது.
ஆட்டு இறைச்சி வாங்கும் போது கவனிக்க வேண்டியது !
சீரான தூக்க சுழற்சி : .
தூக்கம் சரியாக இல்லாத காரணத்தினாலும் முகத்தில் கொழுப்புகள் சேரலாம். தூக்க மின்மையால் உடல் பருமன், குறைந்த வளர்ச்சிதை மாற்றம் அதிகப் படியான உணவு உட்கொள்ளல் போன்ற எதிர்மறையான விளைவுகள் ஏற்படக்கூடும். இதனுடன் மன அழுத்தத்தையும் விட்டு விலகி இருக்கவும்.
(nextPage)
நார்ச்சத்து நிறைத்து உணவுகளை சாப்பிடவும் : .
கார்டியோ பயிற்சிகள் : .
இந்த குறிப்புகளை பின்பற்றினால் முகத்தில் உள்ள கொழுப்பு குறைவதோடு மட்டுமின்றி உடல் எடையையும் குறைக்கலாம். இதற்கு கார்டியோ பயிற்சிகளை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளலாம்.
இது போன்ற பயிற்சிகள் முகத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த உணவு குறிப்புகளுடன் தினமும் முகத்திற்கான பயிற்சிகளையும் செய்து வந்தால் குறைந்த நாட்களில் சிறந்த பலன்களை பெறலாம்.
Thanks for Your Comments