பிறப்புச் சான்றிதழ் திருத்தம் செய்வது.. பதிவிறக்கம் செய்வது எப்படி?

3 minute read
0

பிறப்புச் சான்றிதழை இணைய தளத்தில் எளிதாக பெறுவது போலவே பிழை இருந்தாலும் நீங்கள் எளிதாக அதில் திருத்தம் மேற்கொள்ளலாம். இந்த பிறப்புச் சான்றிதழை எப்படி பதிவிறக்கம் செய்வது என்று உங்களுக்கு தெரியுமா?

பிறப்புச் சான்றிதழ் திருத்தம் செய்வது.. பதிவிறக்கம் செய்வது எப்படி?
ஆதார் அட்டை போலவே, ரேஷன் அட்டை போலவே, பிறப்பும் மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் மிக முக்கியமான ஆவணமாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது முதல் ஆதார் அட்டை, பாஸ்போர்ட், உள்ளிட்ட முக்கியமாக அரசு வழங்கும் அடையாள ஆவணங்களை பெறுவதற்கு இந்த பிறப்புச் சான்றிதழ் மிக முக்கியம்.

இந்த சான்றிதழை மருத்துவமனை நிர்வாகம் பதிவு செய்து கொடுத்து விடுகிறது, குழந்தையின் பெயரை மட்டும் நாம் பிறப்பு பதிவாளரிடம் சென்று தேவையான ஆவணங்களை அளித்து சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பு குறித்த விவரங்களை கட்டாயம் பதிவு செய்ய வேண்டியது அவசியம்.

அதுவும் 14 நாட்களுக்குள் ஒவ்வொரு பிறப்பும் பதிவு செய்யப்பட வேண்டும்.

இந்த பொருட்களை மட்டும் உங்க முகத்துல நேரடியா பயன்படுத்தாதீங்க !

கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்

ஒவ்வொரு இறப்பும் 7 நாட்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும், பொதுமக்கள் அவரவர் வாழும் நகர பஞ்சாயத்து பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்ய முடியும் சில நேரங்களில் இந்த சான்றிதழ்கள் தவறவிட நேரிடும்.

இருப்பினும் நீங்கள் கவலை கொள்ள தேவையில்லை, இணைய தளத்தில் பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ்களை நீங்கள் பெறுவதற்கு வசதிகளை தமிழக அரசு செய்துள்ளது.

எப்படி பதிவிறக்கம் செய்வது இணைய தளத்தில்

எப்படி பிறப்பு இறப்பு சான்றிதழ்களை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து என்பதை குறித்து பார்க்கலாம் இதற்கு இரண்டு வகையான வழிமுறைகள் உள்ளன.

சென்னையில் உள்ளவர்கள் chennaicorporation.gov.in/ என்ற இணையதளம் மூலம். பிற பகுதியில் உள்ளவர்கள் etownpanchayat.com/ என்ற இணையதள மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிறகு பிறந்த மாவட்டம், பேரூராட்சி, பிறந்த தேதி, பாலினம் போன்ற அனைத்து விவரங்களையும் சரியாக பதிவு செய்ய வேண்டும். பிறகு சான்றிதழ் தமிழில் வேண்டுமானால் சான்றிதழ் வகை என்பதில் நீங்கள் தமிழ் மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

ஆங்கிலத்தில் உங்களுக்கு வேண்டுமானால் ஆங்கில மொழி என்ற தேர்வை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும்.

பிறகு அனைத்து விவரங்களையும் நீங்கள் சரியாக உள்ளீடு செய்த பிறகு Generate  என்பதை தேர்வு செய்தால்,பிறப்பு சான்றிதழ் விவரங்கள் திரையில் தோன்றும்,இதை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அற்புத உணவு.பாசிப்பருப்பு கூழ் !

பிறப்புச் சான்றிதழில் எவ்வாறு பிழை திருத்தம் செய்வது

பிறப்புச் சான்றிதழ் பிழை திருத்தம் ஏதாவது இருந்தால் அந்த பிழையை உடனடியாக திருத்திவிடுவது நல்லது. இதற்கு பிறப்பு பதிவாளர் அல்லது சுகாதார ஆய்வாளர் அல்லது கிராம நிர்வாக அலுவலர் இவர்களில் யாரையாவது நீங்கள் அணுகலாம்.

பிறப்புச் சான்றிதழ் பிழைதிருத்த வேண்டும் என்று ஒரு மனுவை நீங்கள் கொடுக்க வேண்டும்.

பிறகு குழந்தையின் பெற்றோரின் அடையாளச் சான்று, மருத்துவ மனையில் பிறந்த குழந்தை என்றால் அதற்கு டிஸ்சார்ஜ் சம்மரி, போன்றவற்றை இணைத்து தந்தால் போதும்.

அடுத்த மாதம் முதல் நீங்கள் பிறப்புச் சான்றிதழை அடையாளம் ஆவணமாக பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி வளாகத்தில் சேருவதற்கு, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், திருமணச் சான்றிதழ் பதிவு.

அரசு வேலைகளில் பதிவு என அனைத்திற்கு இனி ஒரே அடையாள ஆவணமாக பிறப்புச் சான்றிதழ் பயன்படுத்தலாம் என மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதற்கு முன்பு அனைத்து நடவடிக்கைகளையும் ஆதார் அட்டை மையமாக வைத்து நடைபெற்று வந்தன பொதுமக்களுக்கு.

இப்பொழுது ஒருவரின் பிறந்த தேதி, பிறந்த இடம் மற்றும் பாலினத்தை உறுதிப் படுத்தும் பிறப்புச் சான்றிதழை இனி ஒரே அடையாளமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 12, April 2025
Privacy and cookie settings