கடல் கடந்து பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த கடலூர் வாலிபர் !

0

காதலுக்கு கண் இல்லை என்று சொல்வார்கள். மொழி, இனம், அந்தஸ்து என எந்த பாகுபாடும் உண்மையான காதலுக்கு இல்லை என்பதையே இவ்வாறு சொல்வதுண்டு. 

கடல் கடந்து பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த கடலூர் வாலிபர் !
அன்பும், பாசமும், புரிதலும் இருந்தால் போதும். கடல் கடந்த காதலும் நிச்சயம் கைகூடும் என்று பல சினிமாக்களில் பார்த்திருப்போம். கடலூர் அடுத்த திருமாணிக்குழி டி. புதுப்பாளையம் சேர்ந்தவர் பத்மநாபன். 

இவர் எம்.பி.ஏ  பட்டதாரி. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த ரோனமி டியாங்கோ குவாங்கோ ஆகியோருக்கு நடுவீரப்பட்டு வெள்ளக்கரை பகுதியில் தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. 

இதற்காக காதலி மற்றும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களை பத்மநாபன் கடலூருக்கு அழைத்து வந்தார். 

(getCard) #type=(post) #title=(You might Like)

இதையடுத்து நேற்று பத்மநாபனுக்கும், ரோனமி டியாங்கோ குவாங்கோவுக்கும் கடலூர் அருகே உள்ள நடுவீரப்பட்டு வெள்ளக் கரையில் உள்ள திருமண மண்டபத்தில் இந்து முறைப்படியும், தமிழ் கலாசாரப்படியும் திருமணம் நடந்தது. 

மணப்பெண் தமிழ்நாட்டு பெண் போலவே சேலை அணிந்து பாரம்பரிய முறைப்படி வந்திருந்தது அங்கிருந்தவர்களை ரசிக்க வைத்தது.

மேலும் பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூர் நாட்டை சேர்ந்தவர்கள் தமிழ் கலாச்சார முறைப்படி வேஷ்டி, சேலை அணிந்து திருமணத்தில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்கள். 

பின்னர் மணமகன் பத்மநாபன் கூறுகையில், நான் எம்.பி‌.ஏ படிப்பை முடித்து விட்டு சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்த நிலையில், ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்த ரோனமி டியாங்கோ குவாங்கோவுடன் நட்பு ஏற்பட்டது. 

இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. நாங்கள் ஒரு வருடமாக காதலித்து வந்த நிலையில் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருந்து வந்தோம். 

அதன் பேரில் நான் எனது மனைவியின் பெற்றோர்களிடம் சென்று எங்கள் காதலை தெரிவித்தோம்‌‌. 

பின்னர் அவர்கள் முழு சம்மதம் தெரிவித்த பிறகு இந்து முறைப்படி தமிழ் கலாச்சாரத்துடன் உறவினர்கள் நண்பர்கள் முன்னிலையில் எனது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

பின்னர் மணமகள் ரோனமி டியாங்கோ குவாங்கோ கூறுகையில், பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த நான் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தேன். அப்போது கணவர் பத்மநாபனுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது. 

எனது பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் எங்களுக்கு தமிழ் கலாச்சாரம் மற்றும் இங்கு நடைபெறும் திருமணங்கள் மிக விமர்சையாகவும், திருவிழா போல் நடைபெறும் என்பது எங்களுக்கு தெரியும். 

ஆனால் எங்கள் நாட்டில் மிக சாதாரணமாக திருமணம் நடைபெறுவது வழக்கம். 

ஆகையால் தமிழ் கலாச்சாரம் மற்றும் இந்து முறைப்படி திருவிழா போல் நடைபெற்ற எங்களது திருமணத்தில் அனைவரும் ஒன்று கூடி மன மகிழ்வுடன் ஆசிர்வாதத்துடன் நடைபெற்றது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்தார். 

மேலும் இவர்களது திருமணத்தை மணப்பெண்ணின் பெற்றோர்கள் வயது முதிர்வு காரணமாக ஆன்லைன் வீடியோ மூலமாக பார்வையிட்டு மகிழ்ச்சி அடைந்ததை காண முடிந்தது. 

அப்பன்டிசைடிஸ் என்பது கல் அடைப்பது அல்ல !

மேலும் இவர்களது திருமணத்தை காணுவதற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து நேரில் வந்து பார்வை யிட்டதும் காண முடிந்தது. 

இதே போல் பல ஆண்டுகளுக்கு முன்பாக பிலிப்பைன்ஸ் பெண்ணை திருமணம் செய்த புதுச்சேரியை சேர்ந்த ராஜேஷ் பாபு என்பவர் கூறுகையில், 

கடல் கடந்து பிலிப்பைன்ஸ் பெண்ணை மணந்த கடலூர் வாலிபர் !

கலாச்சாரம் தமிழ் கலாச்சாரம் என்பது அனைவருக்கும் பிடித்து விட்டதால் இது போன்று பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் தமிழ் கலாச்சாரத்தின் மீது மிகவும் பற்று உடையவர்களாக இருக்கிறார்கள் .

நானும் 1998 ஆம் ஆண்டு பிலிப்பைன்ஸ் பெண்ணை தான் திருமணம் செய்து கொண்டேன். எனது உறவுக்கார பையன் தான் பத்மநாபன் இந்த திருமணத்தில் நாங்கள் கலந்து கொண்டு கலந்து கொள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என கூறினார். 

மரவட்டைகள் பற்றிய சுவாரசியமான தகவல்கள் !

மேலும் மரியம் என்ற பிலிப்பைன்ஸ் சேர்ந்த தமிழ் பெண் கூறுகையில் தமிழ் கலாச்சாரம் பிலிப்பைன்ஸ் நாட்டினருக்கு அதிகம் பிடித்த காரணத்தினால் அவர்கள் அதிகம் இது போன்ற கலாச்சாரங்களை விழும்புவதாக தெரிவித்தார்.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings