கடந்த பல வருடங்களாகவே பல்வேறு வகையான நிதி மோசடி சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
சமீப காலமாக ஆன்லைன் முறையில் மோசடி செய்து பணம் பறிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
குறிப்பாக வாட்ஸ்அப் மற்றும் புதுவித ஆப்ஸ்களை பயன்படுத்தி அப்பாவி மக்களை குறி வைத்து மோசடி கும்பல் பணம் பறித்து வருகிறது.
இதன் காரணமாக தொழில் நுட்பங்களை பயன்படுத்தும் போது மிகவும் பாதுகாப்பாகவும் கவனமாகவும் இருப்பது அவசியமாகிறது.
அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் எந்தவொரு செயலியையும் அல்லது பிற தளத்தையும் எச்சரிக்கையுடன் பயன்படுத்துவது நல்லது. உங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க பல பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்த வேண்டும்.
ஒரு வேளை உங்களுக்கு ஏதேனும் மோசடி நடக்காமல் இருந்தாலும் நீங்கள் அலட்சியமாக இருக்கக் கூடாது. அடுத்து நடைபெறாமல் தடுக்க முயற்சிக்க வேண்டும்.
சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் ஆன்லைன் வழியாக புகார் செய்வதற்கு வசதியாக தேசிய சைபர் குற்றங்கள் புகாரளிக்கும் தளத்தை உருவாக்கி யுள்ளது மத்திய அரசு.
அனைத்து வகையான சைபர் க்ரைம் புகார்களையும் இந்த தளம் கையாள்கிறது. முக்கியமாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களுக்கு அதிக கவனம் கொடுக்கப் படுகிறது.
24 மணி நேரமும் செயல்படும் இந்த தளத்தில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் புகார் தெரிவிக்கலாம்.
உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால், இதற்கென பிரத்யேகமாக வழங்கப்பட்டுள்ள 1930 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள்.
தப்பிக்க என்ன வழி?
சைபர் குற்றங்கள் நடைபெற்ற 24 மணி நேரத்திற்குள் புகாரளிக்க வேண்டும். அப்போதுதான் போலீசாரால் பணப் பரிவர்த்தனையை உடனடியாக டிராக் செய்ய முடியும்.
இதற்கு நீங்கள் சைபர் புகார் எண் 1930ஐ அழைக்க வேண்டும். இது மட்டுமல்லாமல், நீங்கள் ஆன்லைன் சைபர் புகாரையும் பதிவு செய்ய வேண்டும்.
ஆன் லைனில் புகார் கொடுப்பது எப்படி?
உங்களிடம் ஏற்கனவே உள்நுழைவு ஐடி இருந்தால், அதைப் பயன்படுத்தி உள் நுழையவும். ஐடியை உருவாக்க உங்கள் மாநிலம், உங்கள் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்.
அதன் பிறகு பதிவு செய்யப்பட்ட எண்ணில் பெறப்பட்ட OTP நம்பரை பதிவிடவும். அதன் பிறகு கேப்ட்சாவை உள்ளிட்டு submit பட்டனை கிளிக் செய்யவும்.
இப்போது இணையதளத்தில் File A Complaint என்ற ஆப்ஷனை காண்பீர்கள். அதைக் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் விருப்பத்தை ஏற்கவும்.
பின்னர், Report Under Cyber Crime என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இங்கே 4 பகுதிகளாக ஒரு படிவம் இருக்கும். அதில் உங்களுக்கு தேவையான தகவல்களை உள்ளிடவும்.
எல்லாவற்றையும் மீண்டும் சரிபார்த்து submit பட்டனை கிளிக் செய்யவும். இந்த வழியில் நீங்கள் மோசடி தொடர்பான புகாரை ஆன்லைனில் பதிவு செய்ய முடியும்.
நீங்கள் அதன் PDF கோப்பை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுத்து ஏதேனும் தகவல்களுக்கு நீங்கள் சைபர் போலீஸ் மூலம் தொடர்பு கொள்ளப் படுவீர்கள்
Thanks for Your Comments