தூத்துக்குடியில் தலையணையை வைத்து கணவரை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவி, 2 மகள்கள், மகளின் காதலன் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
நேற்று முன் தினம் வீட்டின் மாடியில் செல்வக்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இந்நிலையில் செல்வகுமாரின் உடலை அவரது குடும்பத்தினர் அடக்கம் செய்ய முயன்றுள்ளனர்.
ஆனால் அவரது உடலில் காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த அவரின் உறவினர்கள் கயத்தாறு காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் செல்வக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் செல்வக்குமாரின் மனைவி மற்றும் மகள்களிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் தொடக்கத்தில் 3 பேரும் முன்னுக்கு பின் முரனாக பேசிய நிலையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி யுள்ளனர்.
மேலும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தை செல்வகுமாரின் மனைவி பாக்கியலட்சுமி கூறியதாவது, கடுமையான மதுப்பழக்கத்திற்கு அடிமையான தனது கணவர்
தினமும் குடித்து விட்டு தன்னையும் தனது மகள்களையும் அபாசமாக பேசி வந்ததாகவும் இதனால் தானும் தனது இரண்டு மகள்களும் கடும் கோபத்தில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது மூத்த மகள் கார்த்திகாவுக்கும் அதே பகுதியை சேர்ந்த கந்தவேல் என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாகவும் அது எனது கணவருக்கு பிடிக்கவில்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் செல்வகுமார் கந்தவேலை சந்தித்து தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
செல்வகுமாரால் நாளுக்கு நாள் பிரச்னை அதிகரித்து வருவதாக நினைத்த அவரின் குடும்பத்தினர், கந்தவேலுடன் இணைந்து அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Thanks for Your Comments