இங்கிலாந்து இளவரசி டயனாவின் கவுன்கள் ஏலம் விடப்பட்டது !

1

வேல்ஸ் இளவரசி டயானா வேல்ஸ் இளவரசர் சார்லசின் முதலாவது மனைவி. இவர்களது பிள்ளைகள் இளவரசர்கள் வில்லியம், ஹாரி ஆகியோர் பிரித்தானியாவுக்கு முறையே இரண்டாவது, மூன்றாவது முடிக்குரியவர்கள் ஆவர். 

இங்கிலாந்து இளவரசி டயனாவின் கவுன்கள் ஏலம் விடப்பட்டது !
இளவரசர் சார்ல்சுடன் டயானா திருமண ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்ட நாளில் இருந்து டயானா பொது வாழ்வில் ஒரு முக்கிய புள்ளியாகக் கருதப்பட்டார். 

ஜீரண சக்திக்கு வெற்றிலை சாதம் செய்வது எப்படி?

1961ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி எட்வர்ட் ஜான் ஸ்பென்சர், பிரான்சஸ் ரூத் ப்ரூக் ரோஷே ஆகியோரின் மகளாக பிறந்தவர் டயானா. இவர்களது குடும்பமும் இங்கிலாந்தின் மிகப்பெரிய அந்தஸ்து பெற்ற குடும்பமாகும். 

இவர்களது குடும்பம் இயர்ல் ஸ்பென்சர் குடும்பம் என்ற பெயரை பெற்ற குடும்பம் இந்த குடும்பத்தில் உள்ள ஆண்கள் எல்லாம் அந்த பட்டத்தை பெற்றவர்கள்.

டயானாவிற்கு லேடி ஜேன் பெல்லோஸ் மற்றும் லேடி சாரா மெக்காக்யூடேல் ஆகிய 2 சகோதரி மற்றும் சார்லஸ் பென்சர் என்ற 1 சகோதரன் இருந்தான். 

டயானா தனது பள்ளி படிப்பை ரிடில் ஒர்த் ஹால் ஸ்கூல் மற்றுமம் வெஸ்ட் ஹீத் ஸ்கூலில் படித்தார். இவர் படிக்கும் போது கூச்ச சுபாவம் உள்ள பெண்ணாகவும், மியூசிக் மற்றும் டான்ஸில் விருப்பம் உள்ள பெண்ணாகவும் இருந்தார்.

1997ல் விபத்து ஒன்றில் இறந்த இவர் இன்று வரை பலராலும் நினைவு கூறப்படும் நபராக உள்ளார். இவரது உடைகள் மற்றும் பயன்படுத்திய பொருட்கள் இன்று வரை உலக அளவில் ஏலம் விடப்பட்டு பல கோடிகளை ஈட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டயானா அணிந்த 3 கவுன்கள் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஏலம் விடப்படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது. 

அக்குள் பகுதியில் உள்ள முடியை நீக்க எளிய வீட்டுப் பொருட்கள் ! 

செப்டம்பர் மாதம் 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பெவர்லி ஹில்ஸ் பகுதியில் நடைபெறும் ஏலத்தில் இந்த கவுன்கள் ஏலம் விடப்படவுள்ளன. 

இங்கிலாந்து இளவரசி டயனாவின் கவுன்கள் ஏலம் விடப்பட்டது !

1997-ம் ஆண்டு டயானா விபத்தில் இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன்னர் தொண்டு நிறுவனங்கள் சிலவற்றுக்காக தனது 70 கவுன்களை ஏலம் விட்டிருந்தார்.

அதில் 3 கவுன்களை ஏலம் எடுத்த மிச்சிகனைச் சேர்ந்த எலன் பெத்தோ என்ற பெண்மணி அண்மையில் காலமானதை யடுத்து அவரிடம் இருந்த டயானாவின் உடைகள் மீண்டும் ஏலத்திற்கு வந்துள்ளன.

இந்த 3 கவுன்களில் இளவரசி டயானா பல முறை அணிந்த, முழுவதும் சிவப்பு நிறத்தில் உள்ள கவுன், அதிகப்படியாக 3 கோடியே 30 லட்சம் ரூபாய் வரை ஏலம் போகக் கூடும் என எதிர்ப் பார்ப்பதாக ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

Tags:

Post a Comment

1Comments

Thanks for Your Comments

  1. Intha kavuna vaangi yaaru saami pottukirathu

    ReplyDelete
Post a Comment
Privacy and cookie settings