எதிர்நீச்சல் சீரியலில் பட்டைய கிளப்பி வந்த நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார். சீரியலில் டப்பிங் பேசி கொண்டிருந்த போது மாரிமுத்துக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவரின் இந்த அசாத்திய நடிப்பை தொடர்ந்து அவருக்கு ஜெயிலர் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஜெயிலர் படத்தில் வில்லனாக நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.
எந்த உணவை ஃபிரிட்ஜில் வைக்கலாம்?
ஆதி குணசேகரன் என்று பலராலும் அழைக்கப்பட்ட.. மக்கள் மத்தியில் தன்னுடைய நெகட்டிவ் கதாபாத்திரங்கள் மூலமே கவனிக்கப்பட்ட நடிகர் மாரிமுத்து இன்று காலை மரணம் அடைந்தார்.
தேனி மாவட்டம் பசுமலை கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. 1990இல் இயக்குனராக விரும்பி சென்னை வந்து உணவகங்களில் பணியாற்றினார்.
ராஜ்கிரணிடம் அரண்மனை கிளி (1993) எல்லாமே என் ராசாதான் (1995) படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். மணிரத்னம், வசந்த், சீமான், எஸ்.ஜே.சூர்யா, ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி யுள்ளார்.
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்துவின் திடீர் மறைவால் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்., எதிர்நீச்சல் தொடர் மற்றும் சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதிக கவனம் பெற்றார் மாரிமுத்து.
ஜெயிலர் படத்தில் நடிகர் ரஜினி காந்த், நடிகர் மோகன்லால், நடிகர் சிவராஜ் குமார் ஆகியோர் திரையில் விசில் அடிக்கப்பட்டது போலவே இவருக்கும் அடிக்கப்பட்டது.
இவர் வரும் போதே ஏம்மா ஏய் என்று ரசிகர்கள் உற்சாகமாக கத்தி இவருக்கு வரவேற்பு கொடுத்தனர். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் என்ற பெயரில் இவர் நடித்தது தமிழ்நாடு முழுக்க கவனம் பெற்றது.
அவரின் பிஆர்ஓக்கள் கூறுகையில்.. இன்று அதிகாலையே அவருக்கு டப்பிங் பேசும் போது நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கிறது. கடந்த சில நாட்களாகவே அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருந்தது.
புற்றுநோயை தவிர்க்க சாப்பிட கூடாத உணவுகள் !
அதே போல் அவரின் இதய துடிப்பும் வேகமாக இருந்துள்ளது. இதற்கு அவர் சிகிச்சை எதுவும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் காலையில் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. அவரை மருத்துவ மனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
டப்பிங்கில் நெஞ்சுவலி ஏற்பட்டதால் இவர் தானே காரை எடுத்துக் கொண்டு மருத்துவ மனைக்கு சென்றுள்ளார். அவருக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனையும் இருந்ததாக பிஆர்ஓ தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேனில் ஊற வைத்த பூண்டின் நன்மைகள் !
மாரிமுத்துவின் திடீர் மறைவால் திரையுலகினர் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. தேனி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான வருசநாடு பகுதிக்கு உடல் கொண்டு செல்லப்பட உள்ளது.
அவரின் மறைவிற்கு சென்னையிலும் இன்று அஞ்சலி செலுத்தும் ஏற்பாடுகள் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
Thanks for Your Comments