சம்பாத்தியம் சிறிது ஆனால் அவரின் மனசு பெரிது... விஜய் டிவி பாலா !

1 minute read
0

முதன் முறையாக 3 ஆம்புலன்ஸ்களை அறிமுகப் படுத்திய குக் வித் கோமாளி பாலாவுக்கு குவியும் வாழ்த்துக்கள். விஜய் டிவி நிகழ்ச்சிகளின் மூலம் பேமஸ் ஆன பாலா, மூன்று ஆம்புலன்ஸ்களை முதன் முறையாக அறிமுகப் படுத்தி இருக்கிறார். 

சம்பாத்தியம் சிறிது ஆனால் அவரின் மனசு பெரிது... விஜய் டிவி பாலா !
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டதன் மூலம் பிரபலமானவர் பாலா. 

அந்நிகழ்ச்சியில் தன்னுடைய ரைமிங் காமெடியால் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த இவருக்கு அடுத்தடுத்து விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. 

மழை காலத்தில் பரவும் நோய்கள் என்ன?

அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவரும், புகழும் சேர்ந்து செய்த காமெடி அலப்பறைகள் அந்நிகழ்ச்சியை வேற லெவலில் ஹிட் ஆக்கியது. 

குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பின்னர் தொகுப்பாளராகவும் அவதாரம் எடுத்த பாலா, பல்வேறு இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி அதன் மூலம் சம்பாதித்து வருகிறார். 

அது மட்டுமின்றி சினிமாவிலும் பாலாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. 

இப்படி பிசியாக இருக்கும் பாலா, தான் சம்பாதிக்கும் பணத்தில் பெரும் பாலானவற்றை ஆதரவற்றவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுக்க பயன்படுத்தி வருகிறார்.

கடந்த சில மாதங்களாக நடிகர் பாலா, தன்னுடைய சொந்த செலவில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து உதவி வருகிறார். 

முதலில் அறந்தாங்கி அருகே முதியோர் இல்லம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கி கொடுத்த பாலா, அதையடுத்து மலை கிராமம் ஒன்றிற்கு ஆம்புலன்ஸ் வாங்கித் தந்த அவர், 

அண்மையில் சோளகர் என்கிற பழங்குடியினர் வசிக்கும் கிராமத்துக்கு ஆம்புலன்ஸ் ஒன்றை வாங்கிக் கொடுத்திருந்தார். 

இந்நிலையில், அந்த மூன்று ஆம்புலன்ஸ் முன் நின்று எடுத்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு, தன்னுடைய மூன்று பிள்ளைகள் என குறிப்பிட்டுள்ளார் பாலா. 

அவரின் இந்த புகைப்படத்தை பார்த்த மதுரை முத்து, இப்படி ஒரு இதயம் கர்ணனுக்கு இருந்ததில்லை பாலாவுக்கு இருப்பதில் பெருமை என பாராட்டி பதிவிட்டுள்ளார். 

தைராய்டு பிரச்சனைக்கு உடனடி தீர்வு.... கட்டாயம் பகிருங்கள் !

அதே போல் விஜே ஆண்ட்ரூஸ், இதுக்காகவும் சேத்து சொல்றேன் தம்பி. உனக்கு இன்னும் நிறைய நிகழ்ச்சிகள் படங்கள் வரணும். அதன் மூலம் நீ இன்னும் நிறைய உதவிகள் செய்யனும் தம்பி என மனதார வாழ்த்தி உள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 14, March 2025
Privacy and cookie settings