பிரித்தானிய இளவரசர் வில்லியமுடைய மனைவியாகிய இளவரசி கேட், இங்கிலாந்திலுள்ள சிறை ஒன்றிற்கு சென்றதைக் காட்டும் காட்சிகள் வெளியாகி யுள்ளன.
போதைக்கு அடிமைப்படுதல் குறித்த விழிப்புணர்வு வாரத்தை யொட்டியே அந்த சிறைக்குச் சென்றிருந்தார் கேட். அது தொடர்பான தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு ஆதரவு தெரிவிக்கும் கேட்,
சிறையில் அடைக்கப் பட்டவர்களிடம் அந்த தொண்டு நிறுவனம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக அந்த சிறைக்குச் சென்றிருந்தார்.
இளவரசி கேட்டின் விரல்களில் காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் விரல்களில் பிளாஸ்டர் ஒட்டியிருந்ததை புகைப்படங்களில் காண முடிகிறது.
(getCard) #type=(post) #title=(You might Like)
காலையில் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்லும் முன் ட்ராம்போலின் என்னும் விளையாட்டு உபகரணத்தின் மீது குதித்து விளையாடுவார்களாம்.
கேட் கைகளில் காயம் ஏற்படுவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னும் பல முறை அவர் இதே போல கைகளில் பிளாஸ்டருடன் காணப்பட்டதுண்டு.
அவர் கைகளில் பிளாஸ்டருடன் காணப்பட்ட காட்சிகளை மையமாக வைத்தே பிரித்தானிய ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டதும் உண்டு!
Thanks for Your Comments