ஹீரோ, வில்லன் என கோலிவுட் முதல் பாலிவுட் வரை கலக்கிக் கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, ஒரு பிளாக்பஸ்டர் ஹிட் படத்தில் சம்பளமே வாங்காமல் நடித்துள்ளாராம்.
இவர் தற்போது கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என பல்வேறு திரையுலகில் பிசியான நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தற்போது மகாராஜா என்கிற திரைப்படம் உருவாகி உள்ளது.
இனி முதுகுவலி உங்களை வாட்டுகிறதா? இனி குட் பை சொல்லுங்கள் !
குரங்கு பொம்மை படத்தின் இயக்குனர் நிதிலன் இயக்கி உள்ள இப்படம் தான் நடிகர் விஜய் சேதுபதியின் 50-வது படமாகும். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியிடப்பட்டது.
இதில் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் விஜய் சேதுபதி குறித்து பலரும் அறிந்திடாத தகவல்களை பகிர்ந்து கொண்டார்.
லலித் குமார் விஜய் சேதுபதி நடித்த 96, துக்ளக் தர்பார், மாஸ்டர் மற்றும் காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய நான்கு திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
அந்த ஒரு காரணத்தால் தான் அப்படம் மிகப்பெரிய ஹிட் ஆனது என லலித் குமார் தெரிவித்தார்.
விஜய் சேதுபதி கூட நான் பணியாற்றிய நான்கு படங்களிலும் ஒரு தயாரிப்பாளராக எனக்கு லாபத்தை பெற்றுத் தந்த படங்கள் என நெகிழ்ச்சி உடன் கூறினார் லலித் குமார்.
96 திரைப்படம் 2018-ம் ஆண்டு வெளியாகி அந்த ஆண்டின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படமாக இருந்தது என்பது அனைவரும் அறிந்ததே.
சுவையான செட்டிநாடு இறால் பெப்பர் ப்ரை செய்வது எப்படி?
96 படத்தை விஜய் சேதுபதியின் நண்பர் பிரேம் குமார் தான் இயக்கி இருந்தார். இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Thanks for Your Comments