நாட்டிலே காற்று மாசுபாடு அதிகம் நிறைந்த மாநிலமாக டெல்லி உள்ளது. உலகிலேயே மிகவும் மோசமாக காற்று மாசுபாடுள்ள நகரங்களில் டெல்லியும் ஒன்றாக இருப்பது மக்களை மிகவும் கவலையில் ஆழ்த்தி யுள்ளது.
காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த டெல்லி அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில், டெல்லியில் அதிகளவிலான காற்றின் மாசுவைக் கட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க
தடை விதிக்க முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் முடிவு செய்துள்ளதாக அம்மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய டெல்லியின் சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், டெல்லியில் அனைத்து வகையான பட்டாசுகளையும் தயாரிப்பதும், சேமிப்பதும், விற்பனை செய்வதும், ஆன்லைன் டெலிவரி செய்வதும் மற்றும் வெடிப்பதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
(getCard) #type=(post) #title=(You might Like)
டெல்லி மாசுக்கட்டுப்பாடு குழு சார்பில் கடை வைப்பதற்கு யாருக்குமே உரிமம் வழங்கப்பட வில்லை என்று சுற்றறிக்கை வெளியிட காவல் துறைக்கு உத்தர விடப்பட்டுள்ளது.
பண்டிகை கொண்டாடுவது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு சுற்றுச்சுழலை பாதுகாப்பதும் முக்கியம் என்று தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments