தஞ்சையில் வசித்து வருபவர் சபித்துரு, ஆடை வடிவமைப்பில் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். இவர் கடந்த பத்து ஆண்டுகளாக பென்சில் முனையில் சிற்பங்கள் வடிவமைத்து வருகிறார்.
தஞ்சை பெரியக்கோவில் சிற்பங்களை கண்டு வியந்த அவர், கல்லால் வடிவமைக்கப்பட்ட சிற்பங்களை பென்சில் முனையில் வடிவமைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்,
பெரியக்கோவில் இராஜராஜ சோழன் சிலை, கலைஞர் கருணாநிதி, ஜெயலலிதா, பெரியார் என 400க்கும் மேற்பட்ட சிற்பங்களை செதுக்கி உள்ளார்.
இந்த நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பென்சில் முனையில் இசைக் கருவிகளுடன் இருக்கும் விநாயகர், மிருதங்கம் வாசிக்கும் விநாயகர்,
வீட்டில், தோட்டத்தில் எலி தொல்லையா? இதை ட்ரை பண்ணுங்க... எலி ஓடி விடும் !
வீனை வாசிக்கும் விநாயகர் என 7 வகையான வடிவங்களில் விநாயகர் சிற்பங்களை செதுக்கி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளார். சிலைகளின் உயரம் 3 மி.மீ முதல் 4 மி.மீ வரை என்பது குறிப்பிடத்தக்கது.
தான் செதுக்கிய சிற்பங்களை அனைவரும் பார்க்கும் வகையில் காட்சிப்படுத்த வேண்டும் எனகிற தனது விருப்பத்தை பென்சில் சிற்ப கலைஞர் சபித்துரு தெரிவித்துள்ளார்.
Thanks for Your Comments